இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் 1950 களுக்கு முன்னரே
இருந்திருக்கின்றன.அரை நூற்றாண்டுகளைக் கடந்த நிலையில் இலங்கைத் தமிழ் சினிமா
வரலாற்றுப் பாதையில் நவீன பரிமாணமாக “இங்கிருந்து“ நம்முன் நிற்கிறது.பேராதனைப்
பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவர், கலாநிதி சுமதி சிவமோகன் இப்படத்தை எழுதி
இயக்கியுள்ளார்.
Tuesday, December 24, 2013
Monday, December 9, 2013
சமூக அமைப்பில் மாற்றங்கள் சாத்தியம் ஆகும் போது திரைப்படத்திலும் சாத்தியம் ஆகும்
ராம் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர். சென்னை கிறித்துவ கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம்
பெற்றவர். இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் சில படங்களில் உதவி இயக்குனராக பணி
செய்துள்ளார். 2007 ஆம்
ஆண்டு இவரின் முதல் படைப்பான “கற்றது தமிழ் “ வெளியானது.அண்மையில்
இவரது இயக்கத்தில் வெளியான அப்பா மகள் உறவைச் சித்தரிக்கும் “தங்கமீன்கள்“ தமிழில்
முக்கிய ஒரு படமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நேர்காணலை வழங்க ராம் விருப்பம்
தெரிவித்தார்.தனது இக்கட்டான பணிச் சூழலில் உரிய நேரத்தில் இதனைச் செய்து தர
முடியவில்லை என்று வருந்தினார்.ஒரு உண்மையான படைப்பாளியின் எளிய குணமும் பிரியமும்
அவனது படைப்பையே சிறந்ததாக மாற்றுகிறது.ராமுடன் தொடர்பு கொள்ள உதவி செய்த நண்பர்
பஷீர்,கேள்விகளை திருத்தி செம்மைப்படுத்திய நண்பர் அமீர் அப்பாஸ் இருவருக்கும் நன்றிகள்.
Monday, December 2, 2013
குனசிறி மஹத்தயா- நெஞ்சைத் தட்டும் நினைவு
“ஒரு எறும்புக்குக் கூட நான் அநியாயம் செய்ய நினைப்பதில்லை. என்னை ஏன்
நரகத்தில் போட வேண்டும்“ குனசிறி அவர்களை நினைக்கும் போது அவர் சொன்ன இந்த
வார்த்தைகள்தான் எனக்கு நினைவில் வருகிறது.அவசரமாய் நிகழாது என்று நினைத்த ஒரு
மரணம் குறித்த செய்தி என் செல்போன் திரையில் தோன்றியது.
எல்லா மரணச் செய்திகளும் வாழ்க்கையின் நிச்சயமின்மையை திரும்பத் திரும்ப
நினைவுபடுத்துகின்றன.
Friday, November 22, 2013
'யாதும்' இந்திய தமிழ் முஸ்லிம் உறவின் வரலாற்றுத் தொன்மை பற்றிய ஆவணப்படம்
ஒரு சமூகத்தின் வராற்றுத் தொன்மை என்பது அது வாழும் எல்லாக் காலத்திலும் தேவைப்படும் ஒன்றாகும்.ஒவ்வொரு சமூகமும் தம் வரலாற்று வேர்ககள் குறித்த விசாரனையை மேற்கொள்ள வேண்டும்.ஏனனில் வரலாறு இல்லாத சமூகம் தனது தனித்துவத்தையே இழந்துவிடும்.
அந்தவகையில் தனது வரலாற்றின் வேர்களை நோக்கிய பயணத்தின் நீண்ட தூரத்தைக் கடந்து அதனை ஆவணப்படமாக இயக்கியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த எஸ்.அன்வர்.யாதும் என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணம் இந்திய முஸ்லிம்களது வரலாற்றுத் தொன்மையை தேடிப் பயணிக்கிறது. இந்தியாவின் தமிழ் முஸ்லிம் உறவென்பது நூற்றாண்டு களைக் கடந்தது என்று அது நிரூபிக்கிறது.
Wednesday, November 20, 2013
வாசிக்கக் கற்றுக் கொள்.உலகத்தையே பெற்றுக் கொள்வாய்
'கடந்த ஐம்பது ஆண்டுகளில்
மக்கள்
தொகையும்
கல்வியும்
எத்தனையோ
மடங்கு
விரிவடைந்துவிட்டன.ஆனால் ஒரு நூலின் அச்சிடப்படும்
பிரதிகளின்
எண்ணிக்கை
மாறுதலடையவே
இல்லை.இன்று வாசிப்பை
பல்வேறு
நிலைகளில்
ஒரு
இயக்கமாக
மாற்ற
வேண்டிய
தேவை
தீவிரமடைந்திருக்கிறது'
–தோன்ற மறுத்த தெய்வம்-
புத்தகங்களும்
வாசிப்பும் இந்த உலகின் அறிவுப் பயணத்தில் மிக முக்கிய சாதனங்கள்.வாசிப்பின்றி மனிதன்
பூரணமாவதில்லை.இதனைத்தான் வாசிப்பு மனிதனை முழு மனிதனாக்கும் என்று மரபு வழியாகச் சொல்லி
வருகிறோம்.
Saturday, November 9, 2013
தோன்ற மறுத்த தெய்வம்- காலத்தின் மீதான பதிவு
ஒரு நிகழ்ச்சிக்காக எனது விரிவுரையாளர் ஒருவரை அழைத்துக் கொண்டு செல்லும் நேரத்தில் “தோன்ற மறுத்த தெய்வம்“ புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.மனுஷ்யபுத்திரன் எனும் எழுத்தாளர் அவருக்குப் பரிச்சயம் இல்லை.ஒரு சிறிய அறிமுகம் நான் சொல்ல வேண்டியிருந்தது. மூன்று மணித்தியாலப் பயணத்தில் பெரும் பகுதியில் அவர் நூலை வாசித்துக் கொண்டு வந்தார்.மொழியின் வீச்சும் வேகமும் அபாரம் என்றார்.
Saturday, November 2, 2013
தங்க மீன்கள்- இதயத்தில் பெய்த மழை
“ஒரு வகுப்பிற்கு இரண்டு ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் இருந்தால் நலமாக இருக்கும்.காரணம் ஒருவர் பாடம் நடத்தவும் மற்றவர் மாணவர்களின் செயற்பாடுகளை அருகிலிருந்து கவனிக்கவும் முடியும்.இருவரும் கலந்தாலோசித்து ஒவ்வொரு குழந்தையின் புரிதல் பற்றியும் விவாதித்துக் கற்றுத் தந்தால் விளைவுகள் பிரமாதமானதாக இருக்கும்“ ஜோன் ஹோல்ட்
Tuesday, October 29, 2013
அன்றாட விவகாரங்களிலிருந்து வலுவான செய்தியைச் சொல்லவே நான் முயற்சிக்கிறேன்.-அவன்த ஆடிகல
Tuesday, October 22, 2013
ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை: இடை வெளிகளை இட்டு நிரப்பும் நூல்
காயல்பட்டினம் கே.எஸ்.முஹம்மது
ஷுஐப் அவர்கள் எனது நூலுக்கு எழுதிய அறிமுகக் குறிப்பு இம்மாத “சமரசம்“ இதழில் வெளியாகியுள்ளது. நன்றியுடன் இங்கு பிரசுரிக்கிறேன்.
ஆன்மீக தளத்தில்
இயங்கும் எல்லா மதங்களும் இவ்வுலக
வாழ்க்கையை புறக்கணிக்கச்
சொல்கின்றன. இஸ்லாத்தை தவிர. இந்த வாழ்வும், இந்த உடலும் நிலையற்றவை. எனவே, அவைகளை
பராமரிக்கத் தேவையில்லை என்பது அவைகளின் உள்ளடக்கம். “காயமே இது பொய்யடா...” சித்தர்கள்
வாக்கும் இதனடியில் பிறந்ததே.
Monday, October 14, 2013
நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கிறது- கவிதைச் செயல் அனுபவம்
கவிஞர் அஹமது ஃபைஸல் தனது “நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை
வாசிக்கிறது“கவிதைத் தொகுதியை எனக்கு தபாலிட்டிருந்தார். கவிஞருடன் நெருங்கிப்
பழகிய அனுபவமோ அவரை நேரில் சந்தித்ததோ கிடையாது.அவரது அன்பை நான் மெச்சுகிறேன்.
புத்தகத்தை எனது குட்டித் தங்கை புரட்டிப் பார்த்தாள்.உள்ளே இருக்கும் அறிமுகக்
குறிப்பில் படித்து அவரது “ஆயிரத்தோராவது வேதனையின் காலை“ சிறப்பான தலைப்பு என சிலாகித்தாள்.அப்படியானால்
இந்தத் தலைப்பில் அவளுக்குப் பிடிப்பு ஏற்படவில்லை போலும்.பின்னொரு நாளில் இந்தத்
தலைப்பை அவள் புரியக்கூடும்.அப்போது அது குறித்து எழுதுவாள் என்று நம்புகிறேன்.
Thursday, August 22, 2013
அதிகாரம் இரத்தத்தை விடவும் சுவையானது...
பிணங்களை ஒதுக்கி
முடியாத வேளையில்
மிதித்தே முன்னேறினேன்
மனிதம் நசுங்கித்
தொலைந்தது.
உலகம் கொலைக் களமாக
மாறும் ஒவ்வொரு கணமும் இக்கவிதை எனக்குள் தோன்றி என்னை உணர்விழக்கச் செய்துவிடுகிறது. இலங்கையில்
யுத்தம் முடிந்த போது முதன்முதலாக A9 வழியே பயணித்த போது காற்றெல்லாம் அழுகையின் குரல்களும்
ஒப்பாரிகளும் என் செவிகளுக்குள் கேட்பது போலத் தோன்றியது.
Tuesday, August 13, 2013
Wednesday, August 7, 2013
Wednesday, July 31, 2013
எம்.எச்.எம் ஷம்ஸ் - கலையை ஆயுதமாக்கிய கலைஞன்
வீட்டில் அப்போது
ஒரு கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிதான் இருந்தது.மாலை செய்திகளைத் தொடர்ந்து “வெள்ளிச்
நிறகடிக்கும் வென் புறாவே“ பாடல் ஒளிபரப்பாகும்.அப்பாடலைக் கேட்க எல்லா விளையாட்டுக்களையும்
விட்டுவிட்டு என் 12 ஆவது வயதில் தொலைக்காட்சிக்கு முன்னால் வந்து அமர்வேன். போரின்
அவலங்களை துயரின் வலி சிந்தும் உணர்வுகளோடு பதியப்பட்ட பாடல் அது.மூன்று தசாப்தங்களின்
மொத்த வலியையும் அப்பாடலினூடு நாம் இப்போதும் புரிந்து கொள்கிறோம்.
Wednesday, July 17, 2013
நட்புக்காக சில வார்த்தைகள்
நண்பர் சாளை பஷீர் எனது புத்தகத்திற்கு எழுதிய அறிமுகக் குறிப்புகள் இவை.நன்றியுடன் பிரசுரம் செய்கிறேன்.
இலக்கிய வாதியான எனது
நண்பர் அடிக்கடி சொல்லுவார் , “இறைவனை
எப்போதும் கையில் பிரம்புடன் கூடிய தண்டனைக்காரனாகவே சம கால முஸ்லிம் சமூகம் சித்தரித்து
வந்துள்ளது. மயிலிறகுடன் கூடிய கருணை நிறைந்த இறைவனை ஏன் அவர்கள் காட்ட
மறுக்கின்றனர் ?”
Wednesday, July 10, 2013
நூல் அறிமுக நிகழ்வு
எனது “ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை“ நூல் அறிமுக
நிகழ்வு கடந்த 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை ஹன்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறைப் பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்
அனஸ் அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
Sunday, June 23, 2013
புத்தக வெளியீடு-பதிவுகள்
எனது ‘ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை'புத்தக வெளியீட்டு விழா கடந்த 20 ஆம் திகதி மிகச் சிறப்பாக
நடந்து முடிந்தது.எல்லாப் புகழும் இறைவனுக்கே.பிரதம அதிதியாக கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி
அவர்களும் சிறப்பு அதிதியாக உலக அறிவிப்பாளர் B.H அப்துல் ஹமீத் அவர்களும்
கலந்து கொண்டனர். நூல் மதிப்பீட்டை சகோதரர் சிராஜ் மஷ்ஹுர் அவர்கள் முன்வைத்தார்கள்.
Friday, June 14, 2013
நூல் வெளியீடு
எனது புத்தக வெளியீடு எதிர்வரும் வியாழன் 20 ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கிறது.அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
Wednesday, June 12, 2013
பூமியின் பாடல்...
இயற்கையோடு தம்மையும் இணைத்துக் கொண்டு ஜென் துறவிகள் உலகை அறிய முற்பட்டதன் விளைவாக ஜென் கவிதைகள் தோற்றம் பெற்றன.தமது புலன்களால் இயற்கையை உணர்ந்து அதன் காட்சிகளை தம் கண்களுக்குள் உள்வாங்கி,அதன் சுகங்களை அனுபவித்து,தெரிந்த சொற்களால் தெரியாத அர்த்தங்களைப் படைக்கும் விசித்திரத்தை அவர்கள் செய்து காட்டினார்கள்.
Thursday, June 6, 2013
Thursday, May 30, 2013
Wednesday, May 29, 2013
பச்சை இலையின் கருப்பு நிறம்.
பாலாவின் பரதேசி
திரைப்படத்தை பார்க்கும் எண்ணம் எனக்கு ஏனோ இருக்கவில்லை.அண்மையில் வாங்கிய சஞ்சிகைகளில்
அது குறித்த விமர்சனமே அதிகம் இருந்ததால் படத்தை பார்க்க வேண்டியேற்பட்டது. அண்மையில்
இலங்கையில் முதலாவது தேயிலை பயிரிடப்பட்ட லூல்கந்த பிரதேசத்திற்கு சென்றுவந்திருந்தேன்.அந்த
அனுபவம் பரதேசியை மேலும் பார்க்க ஆவல் தந்தது.
Wednesday, March 27, 2013
பிரார்த்தனை ஆயுதம்
பனி கொட்டும் அதிகாலையில் நிலவின் கலங்கம் தெரியும் வானைப் பார்த்து தன் இரு கரங்களையும் ஏந்திப் புரியும் ஒருவனின் பிரார்த்தனை வீண் போக வாய்ப்பில்லை. எல்லா மனிதரும் தம் நெருக்கடி மிகுந்த பொழுதொன்றில் யாரோ ஒருவனிடம் பிரார்ததனை புரியவே செய்கின்றனர்.கடவுள் நம்பிக்கையற்ற ஒரு நாஸ்திகனும் தன் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள வானத்தைப் பார்த்துக் கொள்கிறான்.
ஓவ்வொரு நாளும் கோடிப் பேரினுடைய குரல்கள் வானத்தின் பக்கம் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.வானவர்களும் அல்லாஹ்வும் அதனை செவிமடுக்கிறார்கள்.காற்றின் திசைகளிலும் வானவெளியிலும் அவை அலைந்து கொண்டு அங்கீகரிப்பிற்காக காத்து நிற்கின்றன.
Tuesday, March 19, 2013
Life of Pi -போராட்டத்தின் குறியீடு
Life of Pi (லைப்ஃ ஒப் பை)என்ற புதின நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புப் புத்தகத்தை அண்மையில் புத்தகசாலை ஒன்றில் பார்த்தேன். இந் நூல் 2001ஆம் ஆண்டில் யான் மார்த்தேல் (Yann
Martel) என்பவரால் எழுதப்பட்டது.விலை ஆயிரத்தையும் தாண்டி இருந்தது.புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆவலை அதே பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.இந்திய விலையின் நான்கு மடங்கு செலுத்தித்தான் இலங்கையில் புத்தகம் வாங்க வேண்டும்.இலங்கையின் அதிகரித்த வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் அவ்வளவு பணம் கொடுத்து புத்தகம் வாங்குவது என்னைப் போன்றவர்களுக்கு கஷ்டமானதுதான்.ஒவ்வொரு புத்தகம் வாங்கி வரும் போதும் உம்மாவின் ஏச்சுடன்தான் அதனை புத்தக ராக்கையில் வைக்க வேண்டும்.இதனை இவ்வளவில் நிறுத்திக் கொண்டு விடயத்திற்கு வருவோம்.
Tuesday, March 5, 2013
டோனி ஹஸன்-இசைப் பயணத்தின் 50 ஆண்டுகள்
டோனி ஹஸன் அவர்களை எதேர்ச்சையாக ஒரு நாள் மாலையில் பள்ளி வாயலில் சந்தித்தேன்.பின்னர் அவரைச் சந்திக்க ஒரு மழையுடன் கூடிய நாளில் அவரது வீட்டிற்குச் சென்றேன்.அன்று அவருடைய 63 ஆவது பிறந்த நாளாக இருந்தது.இசை உலகில் அவருடைய 50 ஆவது வயதை அன்று அவர் நிறைவு செய்திருந்தார்.வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.அன்று சுகயீனமாக இருந்தாலும் நான் ஒலிப்பதிவுக் கருவியை தயார் செய்யவே தன்னை சுதாகரித்துக் கொண்டு அமர்ந்தார்.வழமை போல நான் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன்.
எப்போது இசைத்துறைக்கு வந்தீர்கள்.
நான் பத்தரமுல்லஇதலங்கமையை பிறப்பிடமாகக் கொண்டவன்..1962 இல் நான் சங்கீத மேடைக்கு வந்தேன்.அப்போது கொம்பனித் தெருவிலே ஒரு சங்கீதக் கச்சேரி நடைபெற்றது.பெரிய கலைஞர்கள் அதில் பங்கெடுத்தார்கள். அங்குதான் எனது இசைப் பயணத்தின் முதல் எட்டு ஆரம்பமானது.அப்போது சிங்களப் பாடல்கள்தான் அதிகமாகப் பாடினேன்.எனது 16 ஆவது வயதிலே என்னுடைய வித்துவான் ஆர்.முத்துசாமி(மோகன் ராஜின் அப்பா) 'ஒபநெதிநம்' எனும் படத்தில் மூத்த கலைஞர் ஜே.எ மில்டன் பெரேராவுடன் இணைந்து ஒருபாடலைப் பாட ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்.அது நினைத்துப் பார்த்திராத ஒன்றாக இருந்தது.67 இல் ஒடிஷனில் தேறி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பணத்திற்கு வந்தேன்.70 களில் உயர் தரக் கலைஞராக வந்தேன்.அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.பின்னர் தொடர்ச்சியாக சிங்களம்இதமிழ்இஹிந்தி பாடல்களில் 50 ஆண்டுகளாக இயங்கினேன்.
Friday, February 15, 2013
மொஹிதீன் பெய்க்: நகலெடுக்க முடியாத குரல்
அப்போது எனக்கு 14 வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.எனது வாப்பாவின் தங்கை ஒருவர் வெளிநாடு
சென்று வந்திருந்தார். இரண்டு பொருட்களைத் தவிர அவர் என்னென்ன பொருட்கள் கொண்டுவந்தார்
என்று எனக்கு நினைவில் இல்லை. ஒன்று ஒரு விளையாட்டு விமானம் மற்றது மொஹிதீன் பெய்க்கின்
பாடல்கள் அடங்கிய ஒரு ஒலிப்பேழை). அந்த விமானம் இப்போது இல்லை.ஆனால் ஒலிப்பேழை இருக்கிறது.
மொஹிதீன் பெய்க் இந்தியாவின் தமிழ் நாடு,சேலத்தில் 1919 டிசம்பர் 5 இல் பிறந்தார்.1932 ஆம் ஆண்டு இலங்கைக்கு இடம்பெயர்ந்தார்.இசையின்
தேடல் எப்போதும் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது.வேறு விடயங்களில் அவர் நாட்டம் கொள்ளவில்லை.கல்வியில்
ஆர்வம் இல்லை என்பதை அவரது தலைமை வாத்தியார் ஒரு முறை தந்தையை அழைத்துச் சொல்லிவிட்டார்.அடுத்த
நாள் திருச்சியிலுள்ள ஒரு நடனக் கம்பனிக்கு பெய்க் ஓடி விட்டார்.தனது உஸ்தாதுடனே இருக்கப்
போவதாக வீட்டுக்குச் சொன்னார்.
Sunday, February 10, 2013
இறந்த வீட்டில் வசிப்பவர்கள்
நண்பர் பகல் நிலவனின், கட்டடக்கலையை எளிமையாகவும் கவித்துவமாகவும் சூழலுக்கு பாதிப்பில்லாமலும் அமைக்கலாம் என்பதனை தெளிவு படுத்தும் ஒரு அருமையான கட்டுரை.அவசியம் அனைவரும் படிக்க வேண்டியது.
சமீபத்தில் வாசித்த கட்டுரையில் வரும் வரிகள் அவை.
இந்த நிலப் பரப்பில் தனக்கென சிறியதாகவோ பெரியதாகவோ ஒரு வாழ்விடம் வேண்டும் என விரும்பாத மனிதர்களே இல்லை.
பறவைகளும் விலங்குகளும் காட்டில் வசிக்கும் ஆதி வாசி மனிதர்களும் தங்களுக்கான வசிப்பிடத்தை இயற்கையை ஒட்டியே அமைத்துக்கொள்கின்றனர். இயற்கையும் தனது பசுமையான கரங்களைக்கொண்டு அவைகளை ஆதுரத்துடன் பொதிந்து கொள்கின்றது.
ஆனால் நாட்டில் வாழும் மனிதன் தனது இருப்பிடத்தை . காடு, வயல்,மலை , நீர் நிலைகளை அழித்து அமைக்கின்றான். இயற்கையின் பேரழிவுகளில்தான் தான் வாழ இயலும் என உறுதியாக நம்பவும் செய்கின்றான்.
Tuesday, January 1, 2013
இங்லிஷ் விங்லிஷ் – மறுக்கப்படும் பெண்மையின் குரல்
இது ஒரு நல்ல திரைப்படமாக இருக்கிறது எனக் கூறி எனது நண்பர் ஒருவர் இத்திரைப்படத்தை என்னிடம் தந்தார்.'இங்லிஷ் விங்லிஷ்' என்ற பெயரைப் பார்த்ததும் நிச்சயம் இத்திரைப்படம் நன்றாக இருக்காது என்றே மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.ஆனால் அதற்கு முற்றிலும் மாற்றமாக இருந்தது திரைப்படம்.தமிழ் சினிமாவின் வழக்கமான பள்ளத்தாக்குகளில் விழாமல் வேறு திசையில் படம் பயணிக்கின்றது.
மொழி அறியாமையை மையமாக வைத்து ஒரு குடும்பத்தில் கணவன் இமனைவி,பிள்ளைகளுடனான வாழ்வின் அம்சங்களைச் சுற்றிக் கதை நகர்கிறது.இன்றைய ஆங்கில யுகத்தில் அந்த மொழியை அறியாத சஷி தன் குடும்ப வாழ்வில் கணவனிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் என்னமாதிரியான எதிர்வினைகளை எதிர்நோக்குகிறாள்,அதிலிருந்து அவள் எப்படி மீள்கிறாள் என்பதுதான் கதையின் சுருக்கம்.
Subscribe to:
Posts (Atom)