Friday, November 22, 2013

'யாதும்' இந்திய தமிழ் முஸ்லிம் உறவின் வரலாற்றுத் தொன்மை பற்றிய ஆவணப்படம்



ஒரு சமூகத்தின் வராற்றுத் தொன்மை என்பது அது வாழும் எல்லாக் காலத்திலும் தேவைப்படும் ஒன்றாகும்.ஒவ்வொரு சமூகமும் தம் வரலாற்று வேர்ககள் குறித்த விசாரனையை மேற்கொள்ள வேண்டும்.ஏனனில் வரலாறு இல்லாத சமூகம் தனது தனித்துவத்தையே இழந்துவிடும்.

அந்தவகையில் தனது வரலாற்றின் வேர்களை நோக்கிய பயணத்தின் நீண்ட தூரத்தைக் கடந்து அதனை ஆவணப்படமாக இயக்கியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த எஸ்.அன்வர்.யாதும் என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணம் இந்திய முஸ்லிம்களது வரலாற்றுத் தொன்மையை தேடிப் பயணிக்கிறது. இந்தியாவின் தமிழ் முஸ்லிம் உறவென்பது நூற்றாண்டு களைக் கடந்தது என்று அது நிரூபிக்கிறது.


“ 50 நிமிடங்கள் ஓடும் இந்த யாதும் ஆவணத் திரைப்படம் தமிழ் மண்ணில் இஸ்லாம் வேர் கொண்ட வரலாற்றையும் இஸ்லாமியர்களின் மூதாதையர்களையும் அவர்களோடு வளர்ந்த, வளர்க்கப்பட்ட வணிகம்,கல்வி, இலக்கியம் என எல்லாக் கூறுகளையும் ஆவணப்படுத்தியுள்ளது.“

“தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் பயணம் செய்து தன்னுடைய தமிழ் வேர்களைத் தேடும் அன்வர் பழவேற்காட்டிலும் காயல்பட்டினத்திலும் கீழக்கரையிலும் நாகூரிலும் அவற்றைக் கண்டெடுக்கிறார்.அன்வர் நிறையக் கள்ளுப்பள்ளிகளை அடையாளம் கண்டிருக்கிறார்.“

யாதும் ஒரு முழுமையான ஆவணமாக எம் முன் நிற்கிறது.இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் நாம் தொன்மையான வரலாற்றைக் கொண்டிருக்கிறோம்.எமது வேர்களும் இந்த பூமியில் ஆழமாக இருக்கின்றன.எமது பூர்வீகத்தை ஆவணமாக்கும் பணி எப்போது தொடங்கப்படும்?யார் இதனை முன்னெடுப்பது? என்கின்ற கேள்விகளையே யாதும் மீள மீள எழுப்புகிறது.



1 comment:

  1. MVI:- #மும்பையில் மார்ச் 8 அன்று "யாதும்"ஆவணப்படம் திரையிடல் ...மும்பை விழித்தெழு இயக்கம்
    ============================================
    #யாதும்" ...இந்திய தமிழ் முஸ்லிம் உறவின் வரலாற்றுத் தொன்மை பற்றிய ஆவணப்படம்..

    இயக்கம் கோம்பை எஸ்.அன்வர்.

    (யாதும் போன்ற ஆவணப்படத்தை தேர்வு செய்து எமக்கு தந்த தமிழ்நாடு முற்போக்கு எழத்தாளர் சங்க தோழர் அன்பரசனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்)
    ===========================================
    (அனுமதி இலவசம்)

    நாள் :- 8/3/2014 நேரம் மாலை 7 மணி முதல்
    இடம் :-கம்பன் உயர்நிலைப்பள்ளி , தாராவி ( ONGC அருகில் சயான் ரயில்நிலையம்)
    ஒருங்கிணைப்பு :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
    தொடர்புக்கு :- பிரான்சிஸ் 7738726921 | மதன் 9987325848 | 9702481441

    (ஒவ்வாரு மாதம் இரண்டாம் காரிக் (சனிக்)கிழமை சிறந்த குறும்படம் ,ஆவணப்படம் திரையிடப்படும் )
    ==https://www.facebook.com/sritharthamizhan?fref=ts

    ReplyDelete