Tuesday, March 19, 2013

Life of Pi -போராட்டத்தின் குறியீடு


Life of Pi (லைப்ஃ ஒப் பை)என்ற புதின நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புப் புத்தகத்தை அண்மையில் புத்தகசாலை ஒன்றில் பார்த்தேன். இந் நூல் 2001ஆம் ஆண்டில் யான் மார்த்தேல் (Yann Martel) என்பவரால் எழுதப்பட்டது.விலை ஆயிரத்தையும் தாண்டி இருந்தது.புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆவலை அதே பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.இந்திய விலையின் நான்கு மடங்கு செலுத்தித்தான் இலங்கையில் புத்தகம் வாங்க வேண்டும்.இலங்கையின் அதிகரித்த வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் அவ்வளவு பணம் கொடுத்து புத்தகம் வாங்குவது என்னைப் போன்றவர்களுக்கு கஷ்டமானதுதான்.ஒவ்வொரு புத்தகம் வாங்கி வரும் போதும் உம்மாவின் ஏச்சுடன்தான் அதனை புத்தக ராக்கையில் வைக்க வேண்டும்.இதனை இவ்வளவில் நிறுத்திக் கொண்டு விடயத்திற்கு வருவோம்.



Life of Pi இவ்வருடத்திற்கான ஆஸ்கர் விருதுகள் பலதை வென்றிருக்கிறது.சிறந்த இயக்குனர்இ ஒளிப்பதிவுஇ ஒளிப் பதிவாளர்இவிஷுவல் இபெக்ட்ஸ்இஒரிஜினல் ஸ்கோர்இஉள்ளிட்ட விருதுகள் இத்திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கின்றன.இப்படத்திற்கு நிச்சயம் ஒஸ்கார் கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர்.இந்த எதிர்பார்ப்பு சரி என்பதனை படத்தைப் பார்த்ததும் புரிந்து கொள்ள முடிந்தது.
பையின் வரலாறு (
Life of Pi) என்பது 2012ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் வெளியான ஒரு நாடக-வீரசாகச வகை திரைப்படம் ஆகும். இது 2001ஆம் ஆண்டில் யான் மார்த்தேல் (லுயnn ஆயசவநட) என்பவர் எழுதிய பையின் வரலாறு என்னும் புதினத்தின் அடிப்படையில் உருவான திரைப்படமாகும். ஆங் லீ (Ang Lee) இயக்கிய புதினத்தைத் தழுவி டேவிட் மாகீ (David Magee) திரை வசனம் எழுதியுள்ளார். 

16 வயது நிரம்பிய பிஷீன் மோலிட்டோர் 'பை' பட்டேல் என்னும் இளைஞன் தன் குடும்பத்தோடு பயணம் செய்த கப்பல் கடலில் மூழ்கியதால்இ பயணிகள் அனைவரும் இறந்துபோகஇ பையும் அவனோடு பயணம் செய்த ரிச்சர்ட் பார்க்கர் என்ற அவனது அப்பாவின் விலங்குக் காட்சியகத்தில் இருந்த வங்காளப் புலியும் ஓர் உயிர்காப்புப் படகில் தனித்து விடப்படுகின்றனர்.பின்னர் என்னவாகின்றது என்பதே படத்தின் சுவாரஷ்யமான விடயம்.

தனிமையின் கவித்துவத்தில் ததும்பும் ஒருவகை மிதக்கும் அனுபவத்துடனேயே படம் துவங்குகிறது. பொம்பே ஜெயஸ்ரீயின் குரலில் பாடல் ஒலிக்கிறது.ஒவ்வொன்றும் அற்புதமாக்க் காட்சிப் படுத்தப்படுகிறது விலங்குக் காட்சியகத்திலே.


பாண்டிச் சேரியின்  பதிவுகளும் அப்படித்தான்.அந்த மண்ணின் வாசனை கெமராவில் அப்படியே பிரதிகளிக்கிறது.

பை இந்துவாகவே வளர்கிறான்.இந்து ஆன்மீகத்தின் படிவுகள் அவனுக்குள் மெல்லக் கலக்கின்றன.பையின் அம்மாவின் நம்பிக்கைகளும் இருளில் மெல்ல அவன் காதுகளுக்குள் ஓதும் கதைகளும் அவனின் மனதை ஊடுறுவுகிறது.

பின் அவன் கிறிஸ்தவ மதத்தை அறிந்து கொள்கிறான்.பிறகு இஸ்லாம் மதத்தை.மூன்று மத்த்தையும் பின்பற்ற முனைகிறான்.அவனது ஆன்மீகத்தின் தேடலே அவனை அப்படிப் பயணிக்கச் செய்கிறது.

கனடா பயணமாகும் வழியில் கப்பல் மூழ்குகிறது.உயிர் காக்கும் படகில் பை தப்பிக்கிறான்.தன் குடும்பத்தை நினைத்து i am sorry என அவன் கத்தும் கத்தலில் அன்புஇ கடல் முழுக்க கரைந்து போகிறது போல் இருக்கிறது.

விலங்குக் காட்சியகத்தில் இருந்த வங்காளப் புலியுடன் தன் தனிமையையும் பயத்தையும் கொண்ட போராட்டத்தின் முடிச்சுகள் எப்படி அவிழ்கின்றன என்பதே படத்தின் சாரம்.

'இறைவா என்னை உன்னிடமே ஒப்படைக்கிறேன்'என பை உதவிக்கான எந்தக் குரலையும் கேட்காத வேளையில் ஆகாயத்தை நோக்கிச் சொல்கிறான்.எவ்வித உதவிகளும் அற்ற தருணமொன்றில் எல்லா மனிதர்களும் இப்படித்தான் செய்வார்கள் என்பதன் பிரதிபளிப்பே அது.அல்லது தன் ஆன்மீகத் தேடலினடியாக பை கற்றுக் கொண்டதுதான் அது.

அலையோடும் புலியோடும் பை மேற்கொள்ளும் போரட்டம் வாழ்க்கையின் குறியீடாகவே தோன்றுகிறது.அலை போராட்டத்தின் ஒரு குறியீடுதான்.மலைகளைப் போன்ற கப்பல்களையே பேரலை கவிழ்த்துவிடுகிறது.வாழ்க்கைப் போராட்டமும் எத்தகையை திட உறுதி கொண்ட மனமுடையவர்களையும் அசைத்துப் போடுகிறது.பையும் தன் நம்பிக்கையைக் கொண்டு எதிர்த்துப் போராடுகின்றான்.

புலியும் மற்றொரு குறியீடே.தம் இரை மீதே எப்போதும் கவனம் கொண்டவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதனை அது உணர்த்தி நிற்கின்றது.எல்லாப் போராட்டங்களையும் வெல்ல மன வலிமையே துணை செய்கிறது.


நடுக் கடலின் ஒரு இரவு நேரம் எப்படி இருக்கும்?வானம் எப்படிக் காட்சியளிக்கும்?என்னென்ன விசித்திரங்கள் நடக்கும்? என்ற ஒவ்வொரு கேள்விக்குமான விடைகளை ஒரு அனுபவத் தளத்தில் ஓரளவுக்கு எம்மால் ஊகிக்க முடிகிறது.

இப் பிரபஞ்சத்தின் விசித்திரக் காட்சிகளை மிகச் சரியாக கடலிலிருந்துதான் அவதானிக்க முடியும் எனத் தோன்றுகிறது. அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை மனது பேருவகை கொள்கிறது.

இந்த உலகின் முக்கால் பகுதி நீர்தான்.நீருக்கடியில் இருக்கும் இன்னோர் உலகத்தை நாம் ஒரு போதும் கற்பனை செய்வதில்லை.தண்ணீர் இத் திரைப்படத்தில் பல கோணங்களில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.நீர் இரவோடு கரையும் போதும் அதிகாலையிலிருந்து விலகும் போதும் தென்படும் அழகு அலாதியாகத் தெரிகிறது.இறைவன் இந்த உலகில் எதனையும் வீணுக்காகப் படைக்கவில்லை.

முப்பரிமாணக் காட்சி அமைப்புகளும் சிறப்புத் தோற்றக் காட்சிகளும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.நாவலைத் தாண்டிய விறுவிறுப்பும் வீச்சும் இத்திரைப்படத்தில் இருப்பதால் Life of Pi என்றைக்குமான ஒரு நிரந்தர சாட்சியாக கடல் உள்ள காலம் வரை இருக்கும்.

இணையத்தில் திரைப்படம் குறித்துப் படித்த சில சுவையான தகவல்கள்...

முப்பரிமாணக் காட்சி அமைப்புகளும் சிறப்புத் தோற்றக் காட்சிகளும்

•    படப்பிடிப்புன் முக்கிய கட்டம் சனவரி 18இ 2011இல் பாண்டிச்சேரியில் முத்தியால்பேட்டையில் அமைந்த புனித செபமாலை அன்னை கத்தோலிக்க கோவிலில் நடந்தது. பின், இயக்குநர் ஆங் லீயின் தாய்நாடான தாய்வானில் ஐந்தரை மாதங்கள் படக்காட்சிகள் எடுக்கப்பட்டன.

•    பை கடலில் புயலில் அகப்பட்டுத் தவிக்கின்ற காட்சியைப் படமாக்க தாய்வானில் கைவிடப்பட்ட ஒரு விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுஇ அங்கே பிரமாண்டமான ஒரு நீச்சல் குளம் உருவாக்கப்பட்டது. அதில் கோரமாக எழுகின்ற அலைகளை உருவாக்கிக் கடலின் தோற்றத்தைக் கொடுத்தனர்.

•    படத்துக்காக உருவாக்கப்பட்ட நீச்சல் குளம் 1.7 மில்லியன் காலன் தண்ணீர் கொள்ளும். இராட்சத அலைகளை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட இக்குளம் உலகிலேயே மிகப்பெரியதாம்.

•    தாய்வானில் படக்காட்சிகள் எடுத்து முடிந்ததும்இ மீண்டும் பாண்டிச்சேரியிலும்இ மூணாறுஇ மதுரை போன்ற இடங்களிலும் காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் கனடாவின் மொண்ட்ரியால் நகரில் படப்பிடிப்பு தொடர்ந்தது. சிறப்புத் தோற்றக் காட்சிகள் (visual effects) உருவாக்கும் பொறுப்பு ரிதம் அன்ட் ஹ்யூஸ் ஸ்டூடியோஸ் என்னும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள அந்நிறுவனம் முப்பரிமாணத் தோற்றம் (3னு) உருவாக்க இந்தியாவின் மும்பை, ஐதராபாத், மற்றும் கோலாலம்பூர், மலேசியா, வான்கூவர், தாய்வான் போன்ற இடங்களில் தொழில்நுட்பக் கலைஞரின் உதவியை நாடியது.


•     படத்தில் கடல் காட்சிகளும் புலிக் காட்சியும் தொழில்நுட்ப உணர்வோடு உருவாக்கப்படுவதற்காக ஓராண்டுக்கு மேலாக ஆய்வு நிகழ்ந்ததாம்

•    பையின் வரலாறு திரைப்படம் ஆங் லீ என்பவரால் இயக்கப்பட்டது. அதற்கு மூலமாக அமைந்த புதினமும் அதே பெயர் கொண்டது. அதை 2001இல் எழுதியவர் யான் மார்த்தெல். திரைக்கதை வசனம் உருவாக்கியவர் டேவிட் மாகீ.

•    ஆங் லீ இயக்குநராகச் செயல்படுமுன் வேறு பலர் அவ் வேலையில் ஈடுபட்டு அதைக் கைவிட்டனர்.

•    ஃபாக்ஸ் 2000 திரைப்பட நிறுவனத்தின் இயக்குநர் எலிசபெத் காப்லர் என்பவர் அப்பட இயக்கத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்

•    2003இ பெப்ருவரி மாதம் பையின் வரலாறு படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார். முதலில் அவர் டீன் கெயோர்காரிஸ் என்பவரிடம் திரைக்கதை வசனம் எழுதக் கேட்டார்.

•    அதே ஆண்டு அக்டோபரில் ஃபாக்ஸ் 2000 திரைப்பட நிறுவனம் எம். நைட் ஷியாமளன் படத்தை இயக்குமாறு கேட்டது.

•    ஷியாமளன் பையின் வரலாற்றை இயக்குவதற்கு இசைவு தெரிவித்ததற்கு ஒரு காரணம்இ அவரும் பாண்டிச்சேரியைச் சார்ந்தவர்; படத்தின் கதாநாயகன் பை பட்டேலும் பாண்டிச்சேரியில் பிறந்தவர். ஷியாமளன் 'தி வில்லேஜ்' என்ற படத்தை முடித்ததும் பையின் வரலாற்றை இயக்கத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

•    ஷியாமளன் படத்தின் திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

•    இறுதியில், ஷியாமளன் பையின் வரலாற்றை இயக்கவில்லைஇ மாறாக 'லேடி இன் தி வாட்டர்' என்ற படத்தை இயக்கினார்.

•    பையின் வரலாற்றைக் கைவிட்டது ஏன் என்று கேட்டதற்கு ஷியாமளன் பின்வருமாறு கூறினார்: 'பையின் வரலாறு என்ற புதினத்தின் இறுதியில் ஒருவிதமான திரிபு முடிவு உள்ளது. இயக்குநராக என்னுடைய பெயர் இடப்பட்ட உடனேயே படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு வேறுபட்ட அனுபவத்தைப் பெறக் கூடுமே என்று நான் தயங்கினேன்.'

•    2005இ மே மாதம் அல்ஃபோன்சோ குவாரோன் என்பவர் இயக்குநராக வருவார் என்று கருதப்பட்டது.அவரும் பட இயக்கத்தை ஏற்கவில்லை.

•    அதன் பிறகு ஷான் பியேர் ஷோனே என்பவர் இயக்குவதாகக் கூறப்பட்டது. அவரே திரைக்கதை வசனம் எழுதுவதாகவும் இருந்தது. இந்தியாவில் படப்பிடிப்புக்கும் ஏற்பாடுகள் தொடங்கின. ஆனால் அவரும் இயக்குநராகவில்லை.

•    இறுதியில், ஆங் லீ படத்தை இயக்குவதாக முடிவாயிற்று. அவரே படத்தை இயக்கி முடிவுக்குக் கொணர்ந்தார்.

•    திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பு டேவிட் மாகீ என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

•    அதற்கிடையில் ஆங் லீ திரைப்படத்தில் நடிக்கப் போகும் கதாநாயகனைத் தேடும் படலத்தைத் தொடங்கினார்.

புதுமுகம் சுரஜ் ஷர்மா கதாநாயகன் பையாகத் தேர்ந்தெடுக்கப்படல்

• பையின் வரலாறு படத்துக்குக் கதாநாயகனைத் தேர்ந்தெடுக்க 3000 பேர் நேர்காணலுக்குச் சென்றார்கள்.

•  2010 அக்டோபர் மாதம் இயக்குனர் ஆங் லீ, 17 வயதான சுரஜ் ஷர்மாவைக் கதாநாயகனாக நடிக்கத் தேர்ந்தெடுத்தார்.

•    உடனே சுரஜ் ஷர்மா வீரசாகசம் நிறைந்த படத்தில் நடிக்க தன்னைத் தயார் செய்யத் தொடங்கினார். கடலில் மூழ்கி நெடுநேரம் மூச்சுவிடாமல் இருப்பதுஇ அலைகளை எதிர்த்துப் போராடுவது, புயலில் சிக்கியபிறகும் உயிர்பிழைப்பது போன்ற பல காட்சிகள் படத்தில் வருவதால் அதற்குத் தகுந்த பயிற்சியில் ஈடுபட்டார் சுரஜ். அவர் யோகா பயிற்சியும் மேற்கொண்டார்.

• கதாநாயகன் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாதங்களில் கதாநாயகனின் அம்மா வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகை தபூ தேர்ந்தெடுக்கப்பட்டார். தபூ படத்தில் கீதா பட்டேல் என்னும் பெயரில் வருகிறார்.

படத்திற்கான இசையமைப்பு

•பையின் வரலாறு படத்திற்காக இசையமைத்தவர் மைக்கிள் டான்னா (Mychael Danna) என்பவர். அவரே ஆங் லீயின் முன்னைய படங்கள் சிலவற்றிற்கு இசை அமைத்தவர்.

•  படத்தில் வருகின்ற தாலாட்டு அமைப்பதில் இந்தியாவின் பாம்பே ஜெயஸ்ரீ துணைபுரிந்தார். அவரே படத்தில் தாலாட்டுப் பாடலைத் தமிழில் பாடியுள்ளார்
பாராட்டுகளும் பரிசுகளும்.

• பையின் வரலாறு படம் மிகவும் பாராட்டப்பட்டுள்ளது.

• படத்திற்கு அடிப்படையாக அமைந்த புதினத்தை எழுதிய யான் மார்ட்டேல், 'படம் இவ்வளவு அழகாக உள்ளது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என்று கூறியுள்ளார். கதையை எப்பொருளில் புரிந்துகொள்வது என்பதை நூலின் இறுதியில் வேண்டுமென்றே தெளிவில்லாமல் தாம் விட்டதாகவும்,படத்தில் அந்த அளவுக்குத் தெளிவின்மை தோன்றாவிட்டாலும்இ கதையின் புதிர் அழகாக வெளிப்படுகிறது என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

•இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றுலாத் துறை பரிசு அளித்து இப்படத்தைச் சிறப்பித்துள்ளது.



 



No comments:

Post a Comment