மழையின் ஒவ்வொரு துளியும்
அதனை முழுமையாக ரசிப்பதற்கு
இடம் தருவதேயில்லை.
ஒரு துளியின் பிரமாண்டம் அதை
விட்டும் பார்வையை
அகலச் செய்வதேயில்லை.
மழை
ரசனையின் பாடல்.
ஒவ்வொருவரும் அதனை
ஒவ்வொரு வயதில்தான்
புரிந்து கொள்கிறார்கள்.
குட்டித் தங்கை
சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ பாடலை
எழுதி மனனமிட்டுக் கொண்டு
அடுத்த மழைக்காகக் காத்திருக்கிறாள்.
No comments:
Post a Comment