Wednesday, August 27, 2014

நான் பிரகடனம் செய்கிறேன்













எனது நாட்டில் ஒருசாண் நிலம்
எஞ்சி இருக்கும் வரை
என்னிடம் ஒரு ஒலிவ்மரம்
எஞ்சி இருக்கும் வரை
ஒரு எலுமிச்சை மரம்
ஒரு கிணறு
ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும் வரை

ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம்
ஒரு சுவர்
எஞ்சி இருக்கும் வரை

அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல்-அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும் வரை














 எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள் எனது கைகள்
எனது தண்ணுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்.

சுதந்திரமான மனிதர்கள் பெயரால்
தொழிலாளர்கள் மாணவர்கள் கவிஞர்கள் பெயரால்
நான் பிரகடனம் செய்வேன்

கோழைகள் சூரியனின் எதிரிகள்
அவமான ரொட்டியினால் ஊதிப் புடைக்கட்டும்
நான் வாழும் வரை எனது சொற்களும் வாழும்
சுதந்திரப் போராளிகளின் கைகளில்
ரொட்டியாயும் ஆயுதமாயும்
என்றும் இருக்கும்.

- மஹ்மூத் தர்வீஷ்



Tuesday, August 12, 2014

அன்புள்ள மக்மல்பஃப், எங்கள் நாட்டிலும் ஈரானிய சினிமா இருக்கிறது.... கௌதம சித்தார்த்தன்


இந்தியாவில் கதைக்கா பஞ்சம்? சாலையில்தான் எத்தனை கதைகள்? நான், சாலையிலிருந்த ஒரு கடையில் ஒரு பழச்சாறு வாங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் கையேந்தினான். அவனிடம் பழச்சாறைக் கொடுத்து விட்டு, அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன். அவன் சாலையைக் கடந்துபோய், எதிரிலிருந்த திண்டில் ஒரு செய்தித்தாளை விரித்துப் போட்டு, கால் மேல் கால் போட்டு ஒரு ராஜாவைப்போல உட்கார்ந்து கொண்டு, புறக் காட்சிகளை ஏளனமாகப் பார்த்துக் கொண்டே அந்தப் பழச்சாறைப் பருகினான்.

Thursday, August 7, 2014

முஸ்லிம் பெண்களின் ஆடை- கறுப்பிலிருந்து கலரை நோக்கி… உரையாடலுக்கான ஒரு குறிப்பு



முஸ்லிம் பெண்களின் ஆடை குறித்த பற்றிய சர்ச்சைகள் உலக அளவில் இருந்து வருகின்றன.உலகில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் பல்வகை ஆடைகளைகளை அணிகின்றனர்.சிலர் தமது மதம்,கலாசாரம் சார்ந்து அதை அமைத்துக் கொள்கின்றனர்.இன்னும் சிலர் பிற கலாசாரங்களைப் பின்பற்றி அதைத் தெரிவு செய்து கொள்கின்றனர்.