Wednesday, July 10, 2013

நூல் அறிமுக நிகழ்வு



எனது  “ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை“ நூல் அறிமுக நிகழ்வு கடந்த 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை ஹன்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறைப் பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.


நிகழ்வின் ஆரம்ப உரையை மௌலவி இஸட்.ஏ.எம் ஹனிபா அவர்களும் நூலாய்வை அஷ்ஷெய்க் பீ.தாரிக் அலி(நளீமி) அவர்களும் நிகழ்த்தினார்கள்.நூலின் முதற்பிரதியை கம்பளை பெமிலி பேகர்ஸ் உரிமையாளர் ஐ.எம் அஸ்வர் அவர்களும் சிறப்புப் பிரதியை நூலாசிரியரின் தந்தையிடமிருந்து பேராசிரியர் அனஸ் அவர்களும்  பெற்றுக் கொண்டனர்.

13 வருடங்களுக்குப் பின் பாடசாலை மேடையில் பேசியது மன நிறைவாக இருந்தது.இத்தனை வருடங்களுக்குப் பின்னும் மேடை அதே தோற்றத்தில்தான் காட்சியளிக்கின்றது.என் தயக்கங்களைக் களைந்த அந்த மேடையை நினைத்து நெகிழ்ந்து போனேன்.
நிகழ்வில் கலந்து சிறப்பித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் அன்பும் நன்றிகளும்.


1 comment: