Thursday, November 16, 2023

மணல் – வலிகளைப் புதைக்கும் நிலம்


விசாகேசவ சந்திரசேகரம் எழுதி, இயக்கிய மணல் திரைப்படம் போருக்குப் பிந்திய சூழமைவைப் பேசும் இலங்கையின் முழுநீளத் திரைப்படம். இலங்கைக் கலைஞர்களின் பங்குபற்றுதலோடு வெளியான இத் திரைப்படம் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படத்திற்கான நான்கு விருதுகளை வென்றுள்ளது. எழுத்தாளர்,சமூக செயற்பாட்டாளர்,மனிதஉரிமை சட்டத்தரணி எனப் பல பரிமானங்கள் கொண்ட விசாகேசவ இதற்கு முன் பாங்ஷு எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

'வெய்யில் மணிதர்கள்' நூல் அறிமுகம்



அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் தோற்றம் மங்கலாக நினைவில் இருக்கிறது. அவரது பெயருடனான பரிச்சயம் அந்த அளவில்தான் இருந்தது.

வாசிப்பின் தாகம் தெரிய வந்த நாட்களில் மெல்ல மெல்ல அந்தப் பெயர் மனதில் ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டது. பின் நாட்களில் அவருடைய 'காணாமல் போனவர்கள்' கவிதைத் தொகுப்பை முதன் முதலாக வாசித்தது ஞாபகம். அது போல என்னைத் தீயில் எறிந்தவள். அவர் பிரதம ஆசிரியராக இருந்து வெளிவந்த 'யாத்ரா' கவிதைகளுக்கான இதழ் நல்ல கவிதைகளையும் கவிஞர்களையும் அடையாளப்படுத்தியது.நின்று போயிருக்கக் கூடாது என்று நான் நினைக்கும் இதழ்களில் அதுவும் ஒன்று.

අම්බලම සහ සමාජය : ශ්‍රී ලංකාවේ පුරාණ අම්බලම් පිළිබඳ ඓතිහාසික පර්යේෂණයක් “அம்பலமும் சமூகமும்''


 நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்பலம் பற்றிய நினைவுகள் எனக்குள் இருக்கின்றன. நான் கடக்கும் தெருக்களில் இரண்டு அம்பலங்கள் அமைந்திருப்பதே அதற்குக் காரணம். பெரும்பாலான நேரங்களில் அங்கே யாராவது அமர்ந்து கொண்டும் கதைத்துக் கொண்டும் இருப்பார்கள்.

நண்பர் கலாநிதி. ரோஹித தஸநாயக்க அவர்கள் அம்பலம் பற்றிய நூலைத் தந்தபோது கிராமத்தின் அம்பலங்கள் பற்றிய நினைவே எனக்குள் மேலெழுந்தது.

‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’விறுவிறுப்பான ஒரு நாவலை ஒத்த நூல்.

 


“தமிழின் முதல் நிகழ்ச்சி அளிக்கையாளர் பி.எச். அப்துல் ஹமீத். மற்றெந்த வானொலிக் கலைஞரையும் விட முதலாவதாகவும், மிகச் சிறப்பாகவும் இதைச் செய்திருப்பவர் பி.எச் அப்துல் ஹமீத். உண்மையில் அப்துல் ஹமீத் தோற்றுவித்த நியமங்கள்தான் நிகழ்ச்சி அளிக்கைகளுக்கு மிக முக்கியமாக அமைகின்றன.“

பேராசிரியர்.கா. சிவத்தம்பி
அன்பு அறிவிப்பாளர் எனும் அடைமொழியோடு நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் அப்துல் ஹமீத் அவர்களின் அரை நூற்றாண்டு கால வானலை அனுபவத்தைப் பேசும் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’விறுவிறுப்பான ஒரு நாவலை ஒத்த நூல்.

“சமாதானத்தின் குரல்கள்“ – கடந்த காலத்தின் சாட்சியங்கள்

 


“எங்களுடன் கதையுங்கள் எங்களைப் பற்றிக் கதைக்காதீர்கள்.“ அயா செப்பி
இலங்கையின் முப்பது வருட உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின் போர் குறித்த பல்வேறு நூல்கள் யுத்தத்தின் கொடூரங்களைப் பேசும் நாவல்களாக, சிறுகதைகளாக, கவிதைகளாக, ஆய்வுகளாக பல வடிவங்களில் வெளிவந்தன. இனியும் இப்படி ஒரு யுத்தம் வேண்டாம் என்று பரைசாற்றி கற்றுக் கொண்ட பாடங்களை மையப்படுத்தி அவற்றின் பேசு பொருள் அமைந்திருந்தன.

தோந்நிய யாத்திரா – பண்பாட்டின் வேர்களைத் தேடிய பயணங்கள்

 


சாளை பஷீரின் தோந்நிய யாத்திரா (தோன்றிய பொழுதின் பயணங்கள்), பயணங்களின் வழியே நிலங்களை, பண்பாடுகளை, மனிதர்களை, இயற்கையை,வரலாற்றைப் பேசுகின்ற அவரது சமீபத்திய நூல்.

பன்னிரன்டணா சுல்தான், கசாக்கின் இதிகாசம், நாகூர், பொன்னானி, கொண்டோட்டி, மம்புரம் தங்ஙள், திருவனந்தபுரம் ஆகிய ஏழு கட்டுரைகள் உள்ளடங்களாக தேர்வு செய்யப்படாத பாதை எனும் மொழிபெயர்ப்புக் கவிதையுடன் சீர்மை வெளியீடாக கடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது இந் நூல். அவரது எழுத்துக்கள் நூலுறுப் பெறுவதில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான். ஒரு எழுத்தாளனுக்கு உலகிலுள்ள எல்லா வஸ்த்துக்களையும் விட அவனது நூல்தான் உயர்ந்த சொத்து.

Wednesday, October 11, 2023

இந்த ஆவணப்படத்தை இயக்குவதில் எனக்கிருந்த மிகப் பெரிய வரையறை இத்தகைய ஒரு பரந்த விடயப்பரப்பின் மூலாதாரங்களை எப்படிச் சேகரிப்பது, எங்கிருந்து தொடங்குவது,யாரிடம் கதைப்பது என்பதுதான்- நாத்யா பிமானி பெரேரா

 


இலங்கை முஸ்லிம்களின் ஒலிக்கலைகள் மற்றும் பாடல் மரபுகளை ஆராயும் “மினாரத்“ ஆவணப்பட இயக்குனருடனான நேர்காணல்

 நாத்யா பிமானி பெரேரா திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார். இவரது ஆவணப்படம் மற்றும் புனைகதை படைப்புகள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நாத்யா, நெதர்லாந்து சமூகக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் எம். பட்டம் பெற்றுள்ளார். '4th of February' ரிஸானா நபீக் தூக்கிலிடப்பட்ட ஆண்டு அவரது தலைவிதியைப் பற்றியும், வீட்டு வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்ற மீண்டும் செல்ல இருக்கின்ற இலங்கைப் பணியாளர்களைப் பற்றியும் பேசுகிற அவரது முதல் ஆவணப்படம்.