சிரியாவின் மனிதப்படுகொலைகளை இன்னும் நிறுத்தியபாடில்லை அசாதின் அரசாங்கம்.அன்றாடம் இறந்து மடியும் ஆயிரம் உயிர்களின் வலியையும் அந்த தேசத்தின் விடுதலையையும் பாடுகிறது மாஹிர் ஸெய்னின் இப்பாடல்.
துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும் பந்தாடப்பட்ட மனித ஆத்மாக்களின் துயரம் தோய்ந்த குறியீட்டுக் காட்சிகளால் மாஹிர் தன் பாடலை வலிகளோடு பாடுகிறார்…
வாழ்க்கை மலிவாக மாறியிருக்கின்றது
பல அநாதைச் சிறுவர்கள்
அழுது கொண்டிருக்கிறார்கள் எப்படிப்
புன்னகைப்பதென்பதையும்
மறந்துவிட்டு
அப்பாவிச் சிறுவர்களை அவர்கள்
எப்படிக் கொலை செய்ய முடியும்
மறைந்து கொள் அல்லது
ஓடிவிடு
அன்பு நிச்சயம் மலரும்
இறைவன் என்னை விடுதலையடையச் செய்வான்
அப்போது உன்னால் அதனை எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும்
சுதந்திரம் எனது தலைஎழுத்து
என்னிடம் ஒரு கணா இருக்கிறது
எனது மக்களின் உதட்டில் புன்னகையையும்
அவர்களை சுதந்திரத்துடனும்
கண்ணியத்துடனும் காணும் கனவு அது
Love Will Prevail எனது புதிய காணொளிப் பாடல் சிரிய மக்களுக்கும் பர்மா ஈராக்,பங்களாதேஷ் மற்றும் உலகில் உள்ள பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இப் பாடல் சமர்ப்பணம்.இரவு எவ்வளவு நெடியதென்றாலும் சட்டங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் இறுதியில் அன்பு அனைத்தையும் மிகைக்கும் என்கிறார் மாஹிர் ஸெய்ன்.
No comments:
Post a Comment