டோனி ஹஸன் அவர்களை எதேர்ச்சையாக ஒரு நாள் மாலையில் பள்ளி வாயலில் சந்தித்தேன்.பின்னர் அவரைச் சந்திக்க ஒரு மழையுடன் கூடிய நாளில் அவரது வீட்டிற்குச் சென்றேன்.அன்று அவருடைய 63 ஆவது பிறந்த நாளாக இருந்தது.இசை உலகில் அவருடைய 50 ஆவது வயதை அன்று அவர் நிறைவு செய்திருந்தார்.வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.அன்று சுகயீனமாக இருந்தாலும் நான் ஒலிப்பதிவுக் கருவியை தயார் செய்யவே தன்னை சுதாகரித்துக் கொண்டு அமர்ந்தார்.வழமை போல நான் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன்.
எப்போது இசைத்துறைக்கு வந்தீர்கள்.
நான் பத்தரமுல்லஇதலங்கமையை பிறப்பிடமாகக் கொண்டவன்..1962 இல் நான் சங்கீத மேடைக்கு வந்தேன்.அப்போது கொம்பனித் தெருவிலே ஒரு சங்கீதக் கச்சேரி நடைபெற்றது.பெரிய கலைஞர்கள் அதில் பங்கெடுத்தார்கள். அங்குதான் எனது இசைப் பயணத்தின் முதல் எட்டு ஆரம்பமானது.அப்போது சிங்களப் பாடல்கள்தான் அதிகமாகப் பாடினேன்.எனது 16 ஆவது வயதிலே என்னுடைய வித்துவான் ஆர்.முத்துசாமி(மோகன் ராஜின் அப்பா) 'ஒபநெதிநம்' எனும் படத்தில் மூத்த கலைஞர் ஜே.எ மில்டன் பெரேராவுடன் இணைந்து ஒருபாடலைப் பாட ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்.அது நினைத்துப் பார்த்திராத ஒன்றாக இருந்தது.67 இல் ஒடிஷனில் தேறி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பணத்திற்கு வந்தேன்.70 களில் உயர் தரக் கலைஞராக வந்தேன்.அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.பின்னர் தொடர்ச்சியாக சிங்களம்இதமிழ்இஹிந்தி பாடல்களில் 50 ஆண்டுகளாக இயங்கினேன்.
இசை ஆர்வம் எப்படி வந்தது.இசையை முறையாகப் பயின்றீர்களா?
எனது உம்மாவின் சகோதரர் டீ.கே ஹனிபா அவர்கள் ரேடியோ சிலோனிலே அந்தஸ்துப் பெற்ற கலைஞராக இருந்தார்.அவர் மூலமாகவே நான் இத்துறைக்குள் வந்தேன்.ஏனெனில் எனது வாப்பா நான் கல்வியில் தவறிவிடுவேன் என்பதற்காக என்னை இத்துறைக்கு அனுமதிக்கவில்லை. அவர்தான் அப்பாவிடம் பேசி என்னை இத்துறைக்குள் அறிமுகப்படுத்தியவர். (எனது அப்பா டீ.கே ஹஸன் அவர்களும் ஒரு இசைக் கலைஞர்தான்.)
சொந்தமான இசை முறைகளை உருவாக்கினீர்களா?
ஹிந்திப் பாடல்களிலிருந்து வேறுபட்ட ஒரு முறைமையைத்தான் நாம் கையாண்டோம்.நல்ல கருத்துக்களைக் கொடுக்க அது வாய்ப்பாக அமைந்தது.'அண்ணல் நபிகள் அநாதைகளை ஆதரித்த கதை கேளீர்' 'கண்ணே கண்மனியே கேள் அண்ணை மொழியை' போன்ற பல நல்ல பாடல்களை என்னால் செய்ய முடிந்தது.இப்படியான பாடல்கள் தமிழ்இஹிந்தி இசைப் பாணியில் அமையக் கூடாது.எனவே அவற்றிலிருந்து வேறுபட்டுத்தான் இப் பாடல்கள் அமைந்தன.ஈ.எம் ஹனிபா போன்றவர்களுக்கு நல்ல வரிகள் கிடைத்தன.எனவே பாடல்களும் சிறப்பாக அமைந்தன.
அப்படியாயின் உங்களுக்கு நல்ல வரிகள் கிடைக்கவில்லையா?
அப்படிச் சொல்ல முடியாது.இங்கு எழுதிய வரிகள் வேறுவிதமாக அமைந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.தங்களது திறமைமைக்கு ஏற்ப இவர்கள் எழுதினார்கள்.எனவே நாம் அதிலே போதாமைகளைக் காண முடியாது.ஆனால் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
இசை கூடாது என்ற நிலைப்பாடு உங்களைக் குழப்பமடையச் செய்யவில்லையா?
பாடக் கூடாது என்று நிறையப் பேர் சொல்கிறார்கள்.ஆனால் எனக்கு இறைவன் குரலைக் கொடுத்திருக்கிறான்.நானும் இந்த உலகில் வாழ வேண்டும் அல்லவா?குரலைக் கொண்டு பிழைத்துக்கொள் என்றுதான் நான் அதனைப் புரிந்து கொண்டேன்.
நவீன இசையை எப்படி நோக்குகிறீர்கள்.
பல வகையான பாடல்கள் வந்திருக்கின்றன.ஆனால் நேரமெடுத்து நிதானமாகச் செய்பவர்கள் வெற்றியடைகிறார்கள்.கால ஓட்டத்தில் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கின்றது.ஒரு காலத்தில் அப்படி. இன்னொரு காலத்தில் இப்படி.மக்களுக்கு ஒரு செய்தியைக் கொடுக்க நாம் முனைய வேண்டும்.யாரையும் நான் விமர்சிக்க விரும்பவில்லை.என்னை ஒரு பெரிய பாடகன் என நான் ஒருபோதும் சொல்லிக் கொள்ளவில்லை.யார் என்னிடம் எது சொன்னாலும் நான் கேட்டுக் கொள்வேன்.அது சிறிய பிள்ளையாக இருந்தாலும் சரி.ஏனெனில் எல்லோருக்கும் எல்லாம் தெரியாது.இதுதான் வாழ்க்கை.யாரையும் நாம் தட்டிக் கழிக்க முடியாது.எல்லோரையும் மதிக்க வேண்டும்.
No comments:
Post a Comment