Thursday, November 16, 2023

மணல் – வலிகளைப் புதைக்கும் நிலம்

 


விசாகேசவ சந்திரசேகரம் எழுதி, இயக்கிய மணல் திரைப்படம் போருக்குப் பிந்திய சூழமைவைப் பேசும் இலங்கையின் முழுநீளத் திரைப்படம். இலங்கைக் கலைஞர்களின் பங்குபற்றுதலோடு வெளியான இத் திரைப்படம் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படத்திற்கான நான்கு

'வெய்யில் மணிதர்கள்' நூல் அறிமுகம்



அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் தோற்றம் மங்கலாக நினைவில் இருக்கிறது.  அவரது பெயருடனான  பரிச்சயம் அந்த அளவில்தான் இருந்தது.

අම්බලම සහ සමාජය : ශ්‍රී ලංකාවේ පුරාණ අම්බලම් පිළිබඳ ඓතිහාසික පර්යේෂණයක් “அம்பலமும் சமூகமும்''

 


 நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்பலம் பற்றிய நினைவுகள் எனக்குள் இருக்கின்றன. நான் கடக்கும் தெருக்களில் இரண்டு அம்பலங்கள் அமைந்திருப்பதே அதற்குக் காரணம். பெரும்பாலான நேரங்களில் அங்கே யாராவது அமர்ந்து கொண்டும் கதைத்துக் கொண்டும் இருப்பார்கள்.

நூல் அறிமுகம் - ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’விறுவிறுப்பான ஒரு நாவலை ஒத்த நூல்.

 


தமிழின் முதல் நிகழ்ச்சி அளிக்கையாளர் பி.எச். அப்துல் ஹமீத். மற்றெந்த வானொலிக் கலைஞரையும் விட முதலாவதாகவும், மிகச் சிறப்பாகவும் இதைச் செய்திருப்பவர் பி.எச் அப்துல் ஹமீத். உண்மையில் அப்துல் ஹமீத் தோற்றுவித்த நியமங்கள்தான் நிகழ்ச்சி அளிக்கைகளுக்கு மிக முக்கியமாக அமைகின்றன.“ பேராசிரியர்.கா. சிவத்தம்பி

“சமாதானத்தின் குரல்கள்“ – கடந்த காலத்தின் சாட்சியங்கள்

 


 எங்களுடன் கதையுங்கள் எங்களைப் பற்றிக் கதைக்காதீர்கள்.“ அயா செப்பி

இலங்கையின் முப்பது வருட உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின் போர் குறித்த பல்வேறு நூல்கள் யுத்தத்தின் கொடூரங்களைப் பேசும் நாவல்களாக, சிறுகதைகளாக, கவிதைகளாக, ஆய்வுகளாக பல வடிவங்களில் வெளிவந்தன.

நூல் அறிமுகம் - தோந்நிய யாத்திரா – பண்பாட்டின் வேர்களைத் தேடிய பயணங்கள்

 


 சாளை பஷீரின் தோந்நிய யாத்திரா (தோன்றிய பொழுதின் பயணங்கள்), பயணங்களின் வழியே நிலங்களை, பண்பாடுகளை, மனிதர்களை, இயற்கையை,வரலாற்றைப் பேசுகின்ற அவரது சமீபத்திய நூல்

Wednesday, October 11, 2023

இந்த ஆவணப்படத்தை இயக்குவதில் எனக்கிருந்த மிகப் பெரிய வரையறை இத்தகைய ஒரு பரந்த விடயப்பரப்பின் மூலாதாரங்களை எப்படிச் சேகரிப்பது, எங்கிருந்து தொடங்குவது,யாரிடம் கதைப்பது என்பதுதான்- நாத்யா பிமானி பெரேரா

 


இலங்கை முஸ்லிம்களின் ஒலிக்கலைகள் மற்றும் பாடல் மரபுகளை ஆராயும் “மினாரத்“ ஆவணப்பட இயக்குனருடனான நேர்காணல்

 நாத்யா பிமானி பெரேரா திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார். இவரது ஆவணப்படம் மற்றும் புனைகதை படைப்புகள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நாத்யா, நெதர்லாந்து சமூகக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் எம். பட்டம் பெற்றுள்ளார். '4th of February' ரிஸானா நபீக் தூக்கிலிடப்பட்ட ஆண்டு அவரது தலைவிதியைப் பற்றியும், வீட்டு வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்ற மீண்டும் செல்ல இருக்கின்ற இலங்கைப் பணியாளர்களைப் பற்றியும் பேசுகிற அவரது முதல் ஆவணப்படம்.

Tuesday, March 21, 2023

தட்டு தெகே இஸ்கோலே – சுவர்களுக்கு வெளியில் ஒரு வகுப்பறை

 

                           

 

//இரவும் பகலும் என் நாடி நரம்புகளில் ஓடும் அதே வாழ்க்கையருவிதான்  உலகமெலாம் ஓடி தாள லயங்களுடன் களி நடனம் புரிகிறது. பூமியின் துணிக்கைகள் வழியாக எண்ணற்ற புல்வெளியில் ஆனந்தமாய் அரும்பி.. ஆரவாரமாக அலைபாயும் இலைகளாயும் பூக்களாயும் சட்டென்று வடிவம் கொள்வதும் அதே வாழ்க்கைதான்.// ரவீந்திரநாத் தாகூர்(மொழிபெயர்ப்பு- பீ.எம்.எம் இர்பான்)

தட்டு தெகே இஸ்கோலே තට්ටු දෙකේ ඉස්කෝලේ (இரண்டு மாடிப் பாடசாலை) சர்வதேசத்தின் கவனத்தை வென்ற மற்றொரு சிங்களத் திரைப்படம். பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்குமான திரை விருந்தாக இருக்கிறது இத் திரைப்படம்.

Tuesday, March 7, 2023

Bulletproof Children- நம் சமகாலத்தில் குறுக்கிடும் இருண்ட தேவதைக் கதை



காலத்துக்கு காலம் மாறுபடுகின்ற மனித அனுபவங்களை கலைப்படைப்புகளில் கொண்டு வருகின்ற போது கலைப் படைப்பின் மொழியிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றது. ஒரு கதையை எப்போதும் ஒரே முறையில் சொல்வதைவிட வேறுபட்ட முறைகளில் அந்த கதையை முன் வைக்கின்ற போது அது தருகின்ற அனுபவம் முற்றிலும் வித்தியாசப்படுகிறது. சிங்கள சினிமாத்துறை புதிய இயக்குநர்களின் முயற்சியால் பல பரிசோதனை முயற்சிகளைக் கடந்து கொண்டிருக்கிறது.

Thursday, February 23, 2023

Gaadi(காடி) : ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரல்


 

Gaadi (காடி) திரைப்படம் முடிந்ததும் வேறு உலகம் ஒன்றில் நான் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றியுள்ள எல்லா சப்தங்களுக்கும் நடுவே உறைந்த மனநிலையோடு நான் பயணித்துக் கொண்டுருந்தேன்.ஒரு நல்ல கலைப்படைப்பு நிச்சயம் நம்மை பாதிக்கச் செய்கிறது.