Tuesday, October 26, 2010
meherbaan....
நீ மொழி
நான் அர்த்தம்
நீ அழகு
நான் நாணம்
நீ இல்லாமல்
நான் நிலமற்றவன்
நீ இல்லாமல்
நான் வானமற்றவன்
நீதான் நதி
நான்தான் சங்கமம்
நீதான் புதிய காலம்
நான் புதிய பருவம்
நீ இல்லாமல்
நான் நிலமற்றவன், வானமற்றவன்...
நீ புகழுரை
நான் பணிவு
நீ உள்ளங்கை
நான் அலங்காரம்
நாங்கள் ஒன்றென்றும் எப்போதும் ஒன்றாய் நிற்போம் என்றும்
இன்று பிரகடணம் செய்வோம்...
புயல் அடித்தாலும் நாங்கள் தடுமாற மாட்டோம்..
வர்ணமற்ற இந்த உலகை அன்பினால் வர்ணமாக்குவோம்...
நம்பிக்கையின் விளக்கை ஒளிர வைப்போம்.
அதன் ஒளி எல்லா வீடுகளுக்கும் பரவட்டும்.
நீ காட்சி
நான் பார்வை
நீ கடல்
நான் கரை
நீ மொழி
நான் அர்த்தம்
நீ அழகு
நான் நாணம்
'அதா' படத்தில் வரும் மெஹருபா... என்ற பாடல் மிதக்கும் அனுபவத்தைத் தரக்கூடியது.
அந்த அனுபவம் அதனை மொழிபெயர்க்கத் தூண்டியது...
2010 10 27
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment