Friday, October 29, 2010

பரீட்சை



பரீட்சை எல்லாவற்றையுமே

ஸ்தம்பிக்கச் செய்துவடுகிறது.

பத்திரிகை வாசிப்பதை

புத்தகம் படிப்பதை

பாடல் கேட்பதை

கணணிக்கு முன் அமர்வதை

காலாற நடப்பதை                                             

பரீட்சை எல்லாவற்றையுமே

ஸ்தம்பிக்கச் செய்துவடுகிறது.

நிம்மதியைப் பறித்துக் கொண்டு

சதாவும் அலைய விடுகிறது.                      

சுதந்திரத்தை

காவு கொண்டுவிடுகிறது.

பரீட்சை

வாழ்வை அப்பட்டமாக

வெறுக்க வைத்துவிடுகிறது.






No comments:

Post a Comment