Monday, July 2, 2018

மலைப்பாடகன் – சக மனிதருக்கான குரல்



கனவின் மீதி - அசுரன்
நகரில் நானொரு
கனவு நாயகன்
கிரனைட் கற்களைச் செதுக்கி
கட்டப்பட்டது எந்தன்
பண்ணை வீடு
குளிரெடுக்கும் வீட்டினுள்

அமர்வதற்கோ நீர் இருக்கை

Wednesday, April 11, 2018

பணம்தேடும் உலகில் ரசனைக்கான இடம் பூச்சியமாக இருக்கிறது - ஓவியர் ப்ரியந்த நந்தன


ஓவியர் ப்ரியந்த நந்தன ஸ்பெயினில் நடைபெற இருக்கும் ஓவியக் கண்காட்சிக்காக கொழும்பில் இருக்கும் தனது வேலைத்தளத்தில் ஓவியங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

Tuesday, March 27, 2018

எங்கிருந்து நான் வருகிறேன்



நான் பூமியில் இருந்து வருகிறேன்
பூமிக்கு வருகிறேன்
ஆபிரிக்காவின் இதயத்திலிருந்து
ஆசியாவின் சிறுநீரகங்களிலிருந்து
இந்தியாவிலிருந்து வாசனைத்
திரவியங்களுடன் வருகிறேன்

மூவர்- තුන්දෙනෙක් - மற்றவரைத் தேடிய பயணம்




போர்க் காலத்தையும் போருக்குப் பிந்திய காலத்தையும் மையமாகக் கொண்டு இலங்கையில் சினிமா முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் பிரசன்ன விதானகே,அசோக ஹந்தகம,விமுக்தி ஜயசுந்தர ஆகிய மூன்று இயக்குநர்களும் தமது திரைப்படங்களை இயக்கியிருக்கின்றனர். இதன் காரணமாக சர்வதேசத்தின் கவனத்தை அவர்கள் ஈர்த்தனர்.

மக்கள் பிரதான கட்சிகளுக்கு வாக்களிக்க நினைப்பது அடிமை மனோபாவத்தின் வெளிப்பாடே - பேராசிரியர் லியனகே அமகீர்த்தி



பேராசிரியர் லியனகே அமகீர்த்தி அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்களத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார்.சிங்கள இலக்கியத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட இவரின் சிறுகதை மற்றும் புனைகதை நூல்கள் பல வெளிவந்திருப்பதோடு தேசிய மட்டத்தில் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. இவர் சிங்களச் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர்.

உஸாவிய நிஹடய் – நீதித்துறையின் மௌனத்தை உடைக்கும் குரல்





ஒரு நீதிபதியினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண் நீதியைத் தேடி பல இடங்களுக்கு அலைகிறார்.நீதித்துறை சார்ந்த நிறுவனங்களில் வாக்குமூலம் வழங்குகிறார்.ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுகிறார்.எல்லா முயற்சிகளும் தோல்வியடைவே ராவய பத்திரிகை அலுவலகத்தை நாடுகிறார் கமலாவதி.

வான்கா: குழந்தைகளின் வானம்



ரஷ்ய எழுத்தாளர் அன்டன் செகோவினுடைய வான்கா எனும் சிறுகதையைத் தழுவி மலையாலத்தில் இயக்குனர் ஜெயராஜினால் எடுக்கப்பட்ட திரைப்படத்தை நண்பர் பஷீர் இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்திருந்தார்.இதனை நிச்சயம் பார்க்குமாறு எனக்குப் பரிந்துரைத்தார்.

இனி ஒருவருடன் ஒருவர் பேசுவோம். உரையாடல் மட்டும்தான் நமக்கு முன்னால் எஞ்சியிருக்கிறது - ஜெயக்குமரன்



விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை மகளிர் பொறுப்பாளரான தமிழினியின்ஒரு கூர் வாளின் நிழலில்புத்தகத்தை வாசித்த பிறகு அவரது கணவர் ஜெயக்குமரனைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. ஒருநாள் மாலை கொழும்பில் அவரைச் சந்தித்து உரையாடினேன். தமிழினியின் புத்தகம், போர், போருக்குப் பிந்திய சமாதானம் என பல தளங்களில் உரையாடல் நீண்டது.

நேர்காணல்- இன்ஸாப் ஸலாஹுதீன்

கலைஞர்கள் தமது இருப்பு குறித்தும் சிந்திக்க வேண்டும் - நுவன் ஜயதிலக



18 ஆவது லன்டன் ஆசிய திரைப்பட விழாவில் முதலாவது திரையிடப்பட்ட இலங்கைத் திரைப்படம் “sulanga apa ragena yawi'.இது தவிர சுமார் எட்டு சர்தேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.தற்போது பிரிஸ்பன் திரைப்பட விழாவுக்கு தயாராகும் இத் திரைப்படம் ஸ்டீவன் ஸ்பில் பேர்க் தனது முதலாவது திரைப்படத்திற்காக வென்ற ரெமி விருதை ஹுஸ்டன் திரைப்பட விழாவில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மட்டத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, கவனத்தைப் பெற்றிருக்கும் இத் திரைப்படம் விரைவில் இலங்கையில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

டங்கல் – கனவை வெல்வதற்கான யுத்தம்



இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பின் தங்கிய ஒரு கிராமத்தில் வசிக்கும் மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் தனது நாட்டிற்காக தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை தனது வாழ் நாள் கனவாகக் கொண்டவர். இருந்தாலும் பல்வேறு காரணங்களால் அவரது கனவு நனவாகவில்லை. இக் கனவை தனக்குப் பிறக்கும் ஒரு ஆண் பிள்ளையால் நனவாக்க முடியும் என்று நம்புகிறார்.அவருக்குப் பிறக்கும் நான்கு பிள்ளைகளும் பெண் பிள்ளைகள்.தன் கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு வேறு தொழில் பார்க்க ஆரம்பிக்கிறார்.

பிற சமூகங்களுடன் உரையாட கலை,இலக்கியம் சிறந்த வழியாக இருக்கின்றது


இன்ஸாப் ஸலாஹுதீன் கண்டி மாவட்டத்தில் உடுநுவரை, படுபிடியைச் சேர்ந்தவர்.நளீமியா பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஊடகவியல் டிப்ளோமாவை நிறைவு செய்துள்ளார்.ஊடகம்,பதிப்பு,கலை,இலக்கியம் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.'நிகழ்' என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தை நடாத்தி வருகிறார்.ஒரு ஊகவியலாளராக தனது பயணத்தை ஆரம்பித்து மீள்பார்வை பத்திரிகையினதும் வைகறை சஞ்சிகையினதும் துணையாசிரியராகப் பணியாற்றினார்.இவர் எழுதிய ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை நூல் மற்றும் அதற்காக இயற்றிய பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
 
நேர்காணல்- நஸார் இஜாஸ்