அடிக்கடி
கடந்து போகும்,போய்வரும் இடத்தின் உருவாக்கம் பற்றிப் படிப்பது சுவரஷ்யமாக இருந்தது.நூலின் சாராம்சத்தை இங்கு பகிரலாம் எனக் கருதினேன்.
இயற்கை
எழில் மிக்க, மலைகளால் சூழப்பட்ட, மகாவலி நதிக்கரைக்கு அருகே சுமார் 700 ஹெக்டயார் நிலப்பரப்பை கொண்ட உலகின் அழகான பல்கலைக்கழகங்களில் பேராதனை பல்கலைக்கழகமும் ஒன்று.
1903 இல்
இங்கிலாந்தில் பிறந்த ஐவர் ஜெனிங்ஸ் கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் பட்டம் பெற்றதோடு அதே பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையிலும் பட்டம்
பெற்றார்.பின்னர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகக் கடமையாற்றினார்.
1940 ஆம்
ஆண்டு இங்கிலாந்தில் வெளியான ஒரு பத்திரிகையில் இலங்கையின்
முதலாவது பல்கலைக்கழகமாக உருமாற்றம் பெற உள்ள University College of Ceylon ற்கு 5 வருட காலத்துக்கு முதல்வர்
ஒருவர் தேவைப்படுவதாக விண்ணப்பம் பிரசுரமாகியிருந்தது. இதற்கு விண்ணப்பித்தவர்களில் அதிக தகமை கொண்டிருந்த
ஐவர் ஜெனிங்ஸை பிரித்தானிய ஆட்சியாளர்கள் தெரிவு செய்தார்கள். 1941 ஆம் ஆண்டு ஜெனிங்ஸ்
இலங்கை வந்தடைந்தார்.
இரண்டாவது
உலக மகா யுத்தத்திற்கான சூழல்
உருவாகிக் கொண்டிருக்கும்போது ஜெனிங்ஸின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பயணித்த கப்பல் ஜெர்மனியின் குண்டு வீச்சுக்கு இலக்காகி மயிரிழையில் உயிர் தப்பி மீண்டும் ஐந்து வருடங்களின் பின்பு இலங்கை வந்து சேர்ந்தார்கள்.
இலங்கைக்கு
ஒரு பல்கலைக்கழகம் என்ற கருத்தாக்கம் 1899 ஆம் ஆண்டுகளில்
இருந்தாலும் 1906 ஆம் ஆண்டு பொன்னம்பலம்
அருணாச்சலம் ஜேம்ஸ் பீரிஸ் மாகஸ் பெர்னான்டோ ஆகியோரின் தலைமைத்துவத்தில் Ceylon
University Association என்ற
ஒரு அமைப்பு உருவாகும் வரை அந்த கருத்து
உயிரோட்டம் பெறவில்லை.
1912 ஆம்
ஆண்டு இலங்கை சட்ட சபை பல்கலைக்கழகம்
ஒன்று உருவாக்குவதற்கான ஆலோசனைக்கு அனுமதி வழங்கி இருந்தாலும் 1914 -19 வரையில் நிலவிய உலக மகா யுத்தம்
காரணமாக அது அமுல்படுத்தப்படவில்லை.
1926 ஆம்
ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி கவர்னர்
ஹியூ க்லிபர்ட் இனால் , நீதி அரசர் எம்.டி அக்பர் அவர்களின்
தலைமையில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
1928 ஆம் ஆண்டு வோல்டர் அவர்களுடைய தலைமையில் இன்னும் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த இரண்டு குழுவும் கொழும்பு, கண்டி, பேராதனை ஆகிய இடங்களை பரிந்துரை
செய்தன.
பல்கலைக்கழகம்
அமைவதற்குப் பொருத்தமான இடம் பேராதனைதான் என்பதில்
நீதியரசர் அக்பர் அவர்களின் குழு உறுதியாக இருந்தது.இறுதியில் அக்கருத்தே வென்றது.
பேராதனைப்
பல்கலைக்கழகத்தை ஒரு சிறிய நகரமாக
திட்டமிடுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த கவர்ணர் அன்ட்ரூ, இங்கிலாந்தின் நகர உருவாக்கச் சிற்பியான
லன்டன் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலைப் பேராசிரியரான பெட்ரிக் அபர்க்ரோம் அவர்களை அழைத்தார்கள்.கட்டடக் கலைஞர் க்ளிபர் ஹொலிடேயையும் அழைத்துக் கொண்டு அவர் இலங்கை வந்தார்.
பேராசிரியர். ஐவர் ஜெனிங்ஸ்
இவர்களோடு
இணைய உள்நாட்டுக் கட்டட கட்டடக்கலைஞர் ஷர்லி த அல்விஸ் அவர்களும்
இணைந்து கொண்டார். இவர் இங்கிலாந்தின் லிவர்பூல்
பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றவர். கண்டி மணிக்கூட்டு கோபுரம் உட்பட முக்கிய இடங்களின் திட்டத்தை வரைந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்திலே இருக்கின்ற தேசியக் கட்டடக் கலை அம்சங்களை வடிவமைத்த
முன்னோடி அவராவார்.
பேராசிரியர்.
ஐவர் ஜெனிங்ஸ் ஒரு கலைஞராக இருந்ததால்
அவரது கலை உணர்வு பல்கலைக்கழக
நிர்மாணத்திலும் பிரதிபலித்தது என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
1952.11.06 உத்தியோகபூர்வமாக
இலங்கை பல்கலைக்கழகம் பேராதனை ஆரம்பித்து வைக்கப்பட்டது. எல்லா கட்டிடங்களும் நிறைவு பெற்றபின் 1954 ஏப்ரல் இருபதாம் திகதி இரண்டாம் எலிசபத் மகாராணியினால் பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் பதினான்கு வருடங்கள் உபவேந்தராக கடமையாற்றி 1955 ஆம் ஆண்டு இங்கிருந்து
விடை பெற்று கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் master of
trinity hall பொறுப்பை ஏற்க பேராசிரியர். ஐவர்
சென்றார்.
மேலும்
இலங்கைக்கான பல்கலைக்கழகம் என்ற சிந்தனையின் முன்னோடிகளான
பொன்னம்பலம் ராமநாதன், பொன்னம்பலம் அருணாச்சலம், நிதியரசர் எம். டி அக்பர்,
வைத்தியர் மார்க்ஸ் பெர்னாண்டோ, ஜேம்ஸ் பீரிஸ், டி. பி ஜெயதிலக்க,
வைத்தியர் எஸ்.சி போல்,
டி. எஸ் சேனாநாயக்க, டி.ஆர் விஜேவர்தன, பேராசிரியர்
ராபர்ட் மாஸ் ஆகியோர் பற்றிய
சிறு குறிப்புகளும் நூலில் இருக்கின்றன. அதேபோல ஐவர் ஜெனிஸின் சிலையை
வடிமைத்த சிற்பி பேராசிரியர் சரத் சந்திரஜீவய பற்றிய
குறிப்புகளும் நூலில் அடங்கி இருக்கின்றன.
No comments:
Post a Comment