"இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்கள்
இலங்கையின் பௌத்த சமயப் பண்பாட்டிலும் பெருமாற்றங்களை ஏற்படுத்தின. இலங்கையின் பெரும்பான்மை
இனத்தவர்களான சிங்கள மக்களின் சமயமான பௌத்தம், சிங்கள் மயமாக்கலுக்கு உட்பட்டது. இதனால்
அது தன் அடையாளத்தைச் சிங்கள பௌத்தம் என மாற்றிக்கொண்டது.
மேற்குறித்தவாறாக
மாற்றமுற்ற இலங்கையின் பௌத்தம் சமூகவியல், மானிடவியல் ஆய்வாளர்களால் 'அரசியல் பௌத்தம்'
என அழைக்கப்பட்டது. இலங்கையின் அரசியல் பௌத்தம் என்ற தோற்றப்பாட்டினை ஆராய்ந்து ஆய்வுக்
கட்டுரைகளையும் நூல்களையும், எழுதிய ஆய்வாளர்களில் கணநாத் ஒபயசேகர முன்னோடியாகத் திகழ்கின்றார்.
இவரின் ஆக்கங்கள் இலங்கையின் 'பௌத்த சமூகவியல்' என்னும் சிறப்பு ஆய்வுத் துறையொன்றை
உருவாக்கியுள்ளது என்றால் மிகையாகாது.
கணநாத் ஒபயசேகர
அவர்களாலும் அவரோடு ஒத்த கருத்துடையவர்களான ஆய்வாளர்களாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட
ஆய்வுகளைத் தமிழில் அறிமுகம் செய்யும் வகையில் திரு, க. சண்முகலிங்கம் அண்மைக் காலத்தில்
சில கட்டுரைகளை எழுதினார். அவர் இதுவரை எழுதிய கட்டுரைகளில் ஒன்பதைத் தொகுத்துத் தருவதாக
இந்நூல் அமைந்துள்ளது."(நூலின் பின் அட்டைக் குறிப்பு)
உள்ளடக்கம்
1. பௌத்த சமய
சீர்திருத்த இயக்கமும் புரட்டஸ்தாந்திய பௌத்தத்தின் தோற்றமும்
2. பத்தினி
தெய்வ வழிபாடும் சிங்கள பௌத்தப் பண்பாடும்
3. இலங்கையில்
பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும்
4. துட்டகைமுனுவின்
வீர வரலாறும் அதன் புராணவியல் முக்கியத்துவமும்
5. மகாவம்சமும்
சிங்கள பௌத்த அடையாள உருவாக்கமும்
6. சிங்கள பௌத்த
அடையாள வலியுறுத்தலும் அநகாரிக தர்மபாலவின் வரலாற்று வகிபாகமும்
7. கேர்ணல்
ஒல்கொட்: தியோசொவிக்கல் இயக்கமும் பௌத்த நவீனத்துவமும்
8. கேர்ணல்
ஒல்கொட்: புரட்டஸ்தாந்திய அற ஒழுக்கமும் பௌத்த சமயச் சீர்திருத்தமும்
9. கேர்ணல்
ஒல்கொட்: பௌத்த வினாவிடையும் சமயத் தூய்மைவாதமும்
"புதிய
பௌத்தம் என்னும் தோற்றப்பாட்டை வரலாறு, சமூகவியல், மானிடவியல், சமய தத்துவம்,அரசியல்,
உளவியல் ஆகிய பல்வேறு அறிவியல் துறைகளின் நோக்கு நிலை நின்று ஆராயும் நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும்
ஆங்கில மொழியில் கடந்த 40 ஆண்டுகால எல்லையுள் எழுதப்பட்டுள்ளன. இவ்வகை ஆய்வுகளின் முன்னோடியாக
கணநாத் ஒபயசேகர விளங்குகிறார். அவருடைய எழுத்துக்களுடன் நாம் எம்மைப் பரிச்சயப்படுத்திக்
கொள்வதன் மூலம், இலங்கையின் பௌத்தம் பற்றிய சமூக விஞ்ஞான ஆய்வறிவின் புதிய பரப்புக்குள்
நாம் பிரவேசித்தல் முடியும்."
க. சண்முகலிங்கம்
கணநாத் ஒபேசேகரவின்
ஆய்வுகள் வழியே இலங்கையில் பெளத்தம் பற்றிப் படிப்பது மிகுந்த சுவாரஸ்யம் மிக்கதாய்
இருக்கிறது. நம் சமகாலச் சூழமைவைப் புரியவும் இலங்கையில் பெளத்த சீர்திருத்தத்தின்
செல்நெறிகளைக் கவனமாகப் புரியவும் இந்நூல் துணை புரிந்தது.குமரன் பதிப்பகத்திற்கும்
க.சண்முகலிங்கம் அவர்களுக்கும் நன்றிகள்.
No comments:
Post a Comment