Wednesday, October 14, 2020

எனது மதத்தை நான் கலையாகவே பார்க்கிறேன் - நாரணிப்புழா ஷாநவாஸ்

 

நாரணிப்புழா ஷாநவாஸ் சங்கரம்குளம் நாரணிப்புழா அவரது பூர்வீகம்சிறிய வயதிலிருந்தே சினிமா அவரை மிகவும் பாதித்த ஒன்றுதிரைப்படம்தான் அவர் வாழ்க்கை என்று கூறும் ஷாநவாஸ் பட்டம் பெற்ற பிறகு, சேதானா திரைப்பட நிறுவனத்தில் திரைப்படத்துறையில் பயின்றார்.

Wednesday, June 24, 2020

இசை இன,மத,மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை இணைக்கிறது - கிஹான் பத்திரன



கிஹான் தனன்ஜய பத்திரன இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்லயைச் சேர்ந்தவர்.பெல்மடுல்ல தர்மாலோக நவோத்யா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றுவிட்டு கட்புல மற்றும் அரங்கேற்றற் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.மனோரி உத்கலகே என்ற சங்கீத ஆசிரியை இவரை பல்கழைக்கழகம் வரை அனுப்புவதில் அதிக ஈடுபாடு காட்டியதாக கிஹான் நினைவு கூர்கிறார்.

Sunday, May 10, 2020

ஆனந்த குமாரசுவாமி – கீழ்த்திசைக் கலையை உலகறியச் செய்தவர்


கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் எழுத்தாளர் சம்பத் பண்டார அவர்களது வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தேன். அது ஒரு நண்பகல் நேரம். அவரது வீட்டில் இருந்த சாம்பல் நிற பூனை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது.

Thursday, January 16, 2020

சுனாமி திரைப்படம் பற்றிய பதிவு



கலாநிதி சோமாரத்ன திஸாநாயக்க அவர்களை கடந்த வருடம் சந்தித்த போது சுனாமி திரைக்கதை அவருடைய மேசையில் ,ருந்தது.அப்போது அந்தப் படத்தை யக்கிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.அந்தப் பிரதி எப்படி திரைப்படமாக மாறப் போகிறது என்கிற கற்பனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

Wednesday, January 15, 2020

மனிதாபிமானத்தின் உயர்ந்த செய்தியை சிறுவர்கள் மூலம் கொண்டு செல்ல நான் விரும்பினேன் - இயக்குநர் சோமாரத்ன திஸாநாயக்க




சரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான சோமாரத்ன திஸாநாயக்க இலங்கையின் சிங்களத் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.அவரது முதல் படமே பெரும் வெற்றியீட்டியது.இதனால் அவுஸ்திரேலியாவில் மருத்துவ கதிரியக்கவியல் நிபுணராக இருந்த அவர் சினிமாத்துறைக்கு தன்னை மாற்றிக் கொண்டு இன்றும் அத் துறையில் பயணிக்கிறார்.இவரது பெரும்பாலான படங்கள் சிறுவர்களை மையப்படுத்திய சமூக யதார்த்தப் படங்களே.