Thursday, January 16, 2020

சுனாமி திரைப்படம் பற்றிய பதிவு



கலாநிதி சோமாரத்ன திஸாநாயக்க அவர்களை கடந்த வருடம் சந்தித்த போது சுனாமி திரைக்கதை அவருடைய மேசையில் ,ருந்தது.அப்போது அந்தப் படத்தை யக்கிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.அந்தப் பிரதி எப்படி திரைப்படமாக மாறப் போகிறது என்கிற கற்பனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

சுனாமியின் பிரமாண்டத்தோடு அந்தக் கதை படமாக்கப்பட்டு ப்போது திரையரங்கிற்கு வந்திருக்கிறது.

சோமாரத்ன திஸாநாயக்க எப்போதும் சிறுவர்களை மையப்படுத்தி மனிதாபிமானத்தின் கதைகளை அழகாகப் படமாக்குபவர்.ந்தத் திரைப்படத்திலும் அதனை அவர் சாத்தியப்படுத்தியுள்ளார்.அவரது ஏனைய திரைப்படங்களிலிருந்து து சற்று மாறுபட்ட ஒரு முயற்சிதான்.

நீதிமன்ற வளாகத்தில் கதை தொடங்ககிறது.ஒரு பிள்ளைக்கு ரு குடும்பங்கள்(தமிழ்க் குடும்பமும் சிங்களக் குடும்பமும்) உரிமை கோரும் வழக்கு அது.விசாரனைகளின் வழியே கதை விரிகிறது.றுதியில் குழந்தை யாருக்குச் சொந்தம் என்கிற தீர்ப்பும் தீர்ப்பிற்குப் பின்னர் குழந்தை யாருடன் வாழ்கிறது என்பதுமே கதையின் சுருக்கம்.ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை புனையப்பட்டுள்ளது.
ஒரு குழந்தைக்கு உரிமை கோரும் வழக்கின் வழியே ரண்டு மொழிகளில் படமாக்கப்பட்டுள்ள த் திரைப்படம் ரண்டு சமூகங்களின் உணர்வு நிலையைப் பிரதிபலிக்கிறது.


னப் பிரச்சினையினாலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டு மறுபடியும் னமுறுகல்களை நோக்கி பயணிக்கும் லங்கையில் அன்பினையும் பாசத்தினையும் முதன்மைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ந்தப் படம் உணர்த்துகிறது.

சுனாமியின் கோர நினைவுகள் ஒருபோதும் உள்ளத்திளிருந்து நீங்குவதில்லை.லங்கையின் சகல சமூகங்களும் அந்தத் துயரை எதிர்கொண்டன.உறவுகளை ழந்தவர்களும் குடும்பங்களைப் பறிகொடுத்தவர்களும் ன்றும் அந்த சோகங்களைச் சுமந்து கொண்டுதான் வாழ்கிறார்கள்.

அந்த நினைவுகளை த்திரைப்படம் மறுபடியும் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.ஆழிப் பேரலையின் தாண்டவத்தை அத்தனை கச்சிசமாக படமாக்கியுள்ளார் யக்குநர்.

சிங்களக் கலைஞர்களும் தமிழ்க் கலைஞர்களும் ணைந்து ப் படத்தில் நடித்திருப்பதும் தமிழ் சிங்களம் ஆகிய ரு மொழிகளிலும் த் திரைப்படம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.


நிரஞ்சனி ஷண்முகராஜா,தர்ஷண் தர்மராஜ்,ஹிமாலி ஸயுரங்கி,பிமல் ஜயக்கொடி ஆகிகோர் பிரதான் பாத்திரங்களை ஏற்று அசாத்தியமான முறையில் நடித்துள்ளனர். ஏனையோரது நடிப்பும் அப்படியானதுதான்.
பிரபா பாத்திரத்தை ஏற்று நடிக்கும் சிறுமியின் நடிப்பு தனியாகப் பாராட்டப்பட வேண்டியது.தன் நடிப்பினால் யல்பான உலகை அவள் கட்டமைக்கிறாள்.

ரண்டு பெற்றோர்களினதும் பாசத்தில் சிக்குண்டு நிலைகுலையும் அந்தச் சிறுமின் நடிப்பு, உணர்ச்சிசை எல்லாமே நம்மை கலைத்துப் போட்டுவிடுகின்றன.

விஷ்வ பாலசூரியவுடைய ஒளிப்பதிவு ரோஹன வீரசிங்கவுடைய ,சை என எல்லாமே படத்தை உயரத்தில் வைக்கின்றன.விசாரனைக் காட்சிகளில் சில டங்களில் அலுப்புத் தட்டியது உண்மைதான்.

மதங்களாகப் பிரிந்து நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள அழிவு சுனாமியை விடப் பயங்கரமானது என்பதையும் அனைவருமாகச் சேர்ந்து மனிதாபிமானத்தின் கரங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் சுனாமி திரைப்படம் நமக்குச் சொல்லுகிறது.

யற்கை கற்றுத்தந்த மனிதநேயத்தின் பாடத்தை நாம் மனங் கொண்டு சக மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து அன்பின் வழியில் பயணிக்கும் போது எந்தப் பேரிடர் வந்தாலும் எதிர் கொள்ள முடியும் என்பதை உணர்திச் செல்கிறது சுனாமி.




No comments:

Post a Comment