Friday, January 11, 2019

இனவாதம் தோற்றுப் போன ஒரு கோஷம் - இயக்குநர் அசோக ஹந்தகம



அசோக ஹந்தகம சர்வதேச அரங்கில் நன்கு அறியப்பட்ட இலங்கையின் முக்கிய திரைப்பட இயக்குநர். களனிப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் இங்கிலாந்தின் Warwick பல்கலைக்கழகத்தில்  அபிவிருத்திப் பொருளியலில் முதுகலைமாணிப் பட்டத்தை பெற்றுக் கொண்ட இவர் பல்வேறு கலைப்படைப்புக்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.இவரது திரைப்படங்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் பல விருதுகளை வென்றிருக்கின்றன.தொலைக்காட்சி நாடகம் மேடை நாடகம்,சினிமா என பல தளங்களில் இவர் தொடர்ந்தும் இயங்கி வருகிறார்.அதே நேரம் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகப் பணியாற்றுகிறார்.
சந்திப்பு – இன்ஸாப் ஸலாஹுதீன்

Friday, January 4, 2019

பெண்களது பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம் என்றால் சமூகத்தில் 51 வீதமான வளத்தை பயன்படுத்தாமல் வைத்திருக்கிறோம் - முஹம்மத் ரியாஸ்

முஹம்மத் ரியாஸ் - மனிதாபிமான உதவிகளுக்கான முகாமையாளர்- ஒக்ஸ்பாம்

முஹம்மத் ரியாஸ் உடுநுவரை தஸ்கரையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.ஹன்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையில் கல்வியைப் பெற்றுக் கொண்ட இவர் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிய ஆர்வம் கொண்டு இத்துறையைத் தேர்நதெடுத்தார். போதை எதிர்ப்பு, முரண்பாட்டு முகாமைத்துவம், மனிதாபிமான உதவி என பல தளங்களில் பணியாற்றியுள்ளார். school for international training Boston அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அனர்த்தம் தொடர்பாகவும் அவுஸ்த்திரேலியா Deakin பல்கலைக்கழகத்தில் மனிதாபிமானத் தலைமைத்தும் தொடர்பாகவும்  கலைமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.ஒக்ஸ்பாம்,கெயார், இண்டர்நஷனல் அலார்ட் போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.25 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ள இவர் தற்போது ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் சர்வதேச அலகில் பணியாற்றுகிறார். பங்களாதேசில் 10 இலட்சம் மியன்மார் அகதிகள் தங்கியிருக்கும் முகாமில் மனிதாபிமான உதவிகளுக்கான பொறுப்பாளராக பணியாற்றுகின்ற போது அவருடன் மேற்கொண்ட நேர்காணல் இது.

Thursday, January 3, 2019

சமூகங்களுக்கிடையிலான இடைவெளிகளை நிரப்ப கலைஞர்கள் முன்வர வேண்டும். - நிலார் என்.காஸிம்





நிலார் என்.காஸிம் என்ற பெயர் இந்த நாட்டின் கலை இலக்கியத் துறையில் தவிர்க்க முடியாத ஒரு பெயர்.இத் துறையில் கடந்த 25 வருடங்களாக சிங்கள உலகில் கம்பீரமாக அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார். நிலார் என் காசிம் மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியிலும் இலக்கியத்திலும் சிறப்பு கலைமாணிப் பட்டத்தையும் களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் நிறைவுசெய்துள்ள முதல் முஸ்லிமாக இவர்  இருக்கிறார்.
சுமார் 600 இற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இலங்கையின் சிங்களப் பாடல்களின் போக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்தவர்.தமிழ் இலக்கியத்தை சிங்கள மொழிக்கு கொண்டு செல்வதில் காத்திரமான பங்களிப்பையும் வழங்கியுள்ளார். இரண்டு மொழிகள் ஊடாக மூன்று சமூகங்களை இணைக்கின்ற ஒரு பாலமாக இவர் இருக்கிறார்.
தற்போது இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபணத்தில் விளம்பரம் மற்றும் ஊடகப் பிரிவின் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றுகிறார்.
அவருடைய 25 வருட கலை வாழ்க்கைக்கு வாழ்த்துக் கூறி இந்த நேர்காணலை மேற்கொள்கிறேன்.

மக்கள் தாம் இழந்தைவைகளுக்காகவே நீதி கோருகின்றனர் - அனுஷா சிவலிங்கம்


சிவலிங்கம் அனுஷா கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கொழும்பு பல்கலை கழகத்திற்கு தெரிவாகி ஊடகத்துறை பட்டபடிப்பை நிறைவு செய்து தற்போது ஊடகத்துறை , மொழிபெயர்ப்பு , புகைப்படத்துறை , எழுத்துத்துறை ஆகியவற்றுடன் சேர்ந்து பயணிக்கிறார்.சிங்கள மொழியில் இவர் பெற்றுள்ள புலமையினால் இதுவரை முக்கியமான இரண்டு நூல்களை சிங்களத்துக்கு மொழி மாற்றம் செய்துள்ளார். இன்னும் இரண்டு நூல்கள் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் ஊடாடும் அனுஷா போன்றவர்களால் சமூகங்களுக்கிடையிலுள்ள இடைவெளிகளைக் குறைப்பதில் மகத்தான பணிகளை மேற்கொள்ள முடியும்.ஒரு சிங்கள நூல் வெளியீட்டு விழாவில்தான் அனுஷாவை முதலில் சந்தித்தேன்.இது அவருடனான நேர்காணல்.

என் வானம் என் சிறகு - நட்புக்காக சில வார்த்தைகள்



பயணங்கள் நம் அகக் கண்களைத் திறக்கின்றன.தனிமையிலும் சோர்விலும் சிக்கித் தவிக்கும் வாழ்விற்கு வாசிப்பு மற்றும் பயணத்தின் வழியேதான் விடுதலை கிடைக்கின்றது.ஒவ்வொரு பயணமும் புத்தகமும் பூட்டப்பட்டிருக்கும் ஒரு சாளரத்தைத் திறக்கிறது.புதிய வெளிச்சத்தை  பாய்ச்சுகிறது.