Wednesday, July 20, 2016

எனது புதிய இணையதளம் www.insafsalahudeen.com

www.insafsalahudeen.com என்ற என்னுடைய இணையதளத்தை அன்புக்குரிய பேராசிரியர் எம்.ஏ நுஃமான் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்கள்.ஒரு எளிமையான நிகழ்வு, அன்பு ததும்பும் தருணம்.என் எளிமையான அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அவருடைய பெருந்தன்மைகைக்கு நன்றிகள்.

Wednesday, May 4, 2016

நாடெங்கும் 2 கோடி மரங்கள்… நாமும் நடுவோம்




“ஒரு மரத்தை நடுவதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பம் 20 வருடங்களுக்கு முன்பாகும்.இரண்டாவது சந்தர்ப்பம் இன்றாகும்.“சீனப் பழமொழி
பசுமையைப் பாதுகாப்பதற்கான முயற்சி உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இயற்கை அழிப்பினால் புவி வெப்பமடைவது முதல் பல்வேறு சிக்கல்கள்களை நாம் அனுபவிக்கிறோம்.

Sunday, April 24, 2016

சுயமி- எமக்கான இசை மரபைத் தேடி…





பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கான ஒரு செயலமர்வில் லறீனா அப்துல் ஹக் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அப்போது அவர் “பொறு மகளே பொறு மகளே“ என்ற பாடலைப் பாடினார்.அதன் சில வரிகள் அன்றிலிருந்தே எனக்குள் மனனமாய் இருக்கிறது.

Wednesday, January 20, 2016

பூவன் பழம் - வைக்கம் முஹம்மது பஷீர்

 
 "பூவன் பழம்' என்ற இந்தக் கதையை நான் மனப்பூர்வமாக முன்வந்து எழுதவில்லை. அப்துல்காதர் சாஹிப்பின் தொடர்ச்சி யான தொந்தரவினால்தான் இந்தக் கதையையே நான் எழுதுகிறேன். "இதில் ஒரு பாடம் இருக்கிறது' என்று கூறுகிறான் அவன். அவன் மனைவி ஜமீலா பீபியைப் பற்றிய கதையே இது.

Wednesday, January 13, 2016

ஹோகானா பொகுன- வானம் போல விரியும் கனவுகள் தேடி...




பார்த்துத் தீராத ஒரு ஆச்சரியமாக கடல் நமக்கு முன்னாள் விரிந்து கொண்டே இருக்கிறது. கடலும் அதன் அலைகளும் அது எழுப்பும் சத்தமும் இந்த உலகில் எல்லோரையுமே கவர்ந்திருக்கின்றன.கடலைப் பார்த்திராத ஒரு கிராமத்து மாணவர்கள் கடல் பார்க்க ஆசைப்படுவதும் அதனூடு விரியும் நினைவுகளையும் மையப்படுத்தி அண்மையில் வெளிவந்த திரைப்படம்தான் “ஹோகானா பொகுன“ இத் திரைப்படம் 3 சர்வதேச விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.