‘வாழ்வதற்கான பக்குவத்தை
யாரும் திருமணப் பத்திரிகையில் அச்சடிப்பதில்லை’
இந்த வாசகத்தை என்
முகநூல் பக்கத்தில் எப்போதோ நான் பகிர்ந்திருக்கிறேன். இச் சிறிய வாசகத்தில் ஆயிரம்
அர்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. திருமணம் என்பது வாழ்க்கையில் நடக்கும் ஒரு முக்கிய
நிகழ்வு. பிறந்ததற்குப் பிறகு மனிதன் கொண்டாடப்படும் இரண்டாவது தருணம் அது.வாழ்க்கையில்
ஒரு துணையைத் தேடுவதும் தெரிவு செய்வதும் மனிதனுடைய ஏனைய எல்லாத் தெரிவுகளையும் தேடல்களையும்
விட வித்தியாசமானதாகவும் விசித்திரமானதாகவும் இருக்கிறது.