Tuesday, December 24, 2013

இங்கிருந்து...மலையகத்தின் வாழ்வியல் பதிவுகள்

 
இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் 1950 களுக்கு முன்னரே இருந்திருக்கின்றன.அரை நூற்றாண்டுகளைக் கடந்த நிலையில் இலங்கைத் தமிழ் சினிமா வரலாற்றுப் பாதையில் நவீன பரிமாணமாக “இங்கிருந்து“ நம்முன் நிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவர், கலாநிதி சுமதி சிவமோகன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

Monday, December 9, 2013

சமூக அமைப்பில் மாற்றங்கள் சாத்தியம் ஆகும் போது திரைப்படத்திலும் சாத்தியம் ஆகும்




ராம்  இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர். சென்னை கிறித்துவ கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் சில படங்களில் உதவி இயக்குனராக பணி செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இவரின் முதல் படைப்பான கற்றது தமிழ் வெளியானது.அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான அப்பா மகள் உறவைச் சித்தரிக்கும் “தங்கமீன்கள்“ தமிழில் முக்கிய ஒரு படமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நேர்காணலை வழங்க ராம் விருப்பம் தெரிவித்தார்.தனது இக்கட்டான பணிச் சூழலில் உரிய நேரத்தில் இதனைச் செய்து தர முடியவில்லை என்று வருந்தினார்.ஒரு உண்மையான படைப்பாளியின் எளிய குணமும் பிரியமும் அவனது படைப்பையே சிறந்ததாக மாற்றுகிறது.ராமுடன் தொடர்பு கொள்ள உதவி செய்த நண்பர் பஷீர்,கேள்விகளை திருத்தி செம்மைப்படுத்திய நண்பர் அமீர் அப்பாஸ் இருவருக்கும்  நன்றிகள்.

Monday, December 2, 2013

குனசிறி மஹத்தயா- நெஞ்சைத் தட்டும் நினைவு





“ஒரு எறும்புக்குக் கூட நான் அநியாயம் செய்ய நினைப்பதில்லை. என்னை ஏன் நரகத்தில் போட வேண்டும்“ குனசிறி அவர்களை நினைக்கும் போது அவர் சொன்ன இந்த வார்த்தைகள்தான் எனக்கு நினைவில் வருகிறது.அவசரமாய் நிகழாது என்று நினைத்த ஒரு மரணம் குறித்த செய்தி என் செல்போன் திரையில் தோன்றியது.
எல்லா மரணச் செய்திகளும் வாழ்க்கையின் நிச்சயமின்மையை திரும்பத் திரும்ப நினைவுபடுத்துகின்றன.