Monday, January 31, 2011

ஒரு குட்டிக் கதை...



தாய் ஒட்டகம் ஒன்றும் அதன் குட்டி ஒட்டகம் ஒன்றும் ஒரு மாலைப் பொழுதில் பச்சைத் தளிர்களை மேய்ந்தவாறு உலாத்திக் கொண்டிருந்தன.குட்டி ஒட்டகம் படு சுட்டி. ஓயாமல் வாய் சதா கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டேயி ருக்கும்.அன்றைக்கும் அப்படித்தான்.

'அம்மா!ஏனம்மா நமக்கு மட்டும் முதுகில் திமில் எதற்கு இருக்கு'?

தாய் எப்போதும் பொறுமையாக பதில் செல்லும்.

'நாமெல்லாம் இயல்பாக பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலை வனத்தில் தண்ணீர், பாலைவச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினந்தோறும் கிடைக்காது!கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகித்துகக் கொண்டால், தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு'

குட்டி திரும்பவும் கேட்டது.'அப்போ நமக்கு ஏன் கண் இமை கெட்டியாக இருக்கு? மூக்கை மூடிக்கொள்ள மூடி இருக்கு?மத்த மிருகங்களுக்கு அப்ப டியில்லையே? அது ஏன்?


தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது

'பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும்.அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண் ணுலயும் மூக்குலயும் மணல் போயிடும்.அதனாலதான் நமக்கு அப்படியொரு மூடி இருக்கு.'

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது.'இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதற்கு?


'அது கண்ணு...மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்' பொறுமையாகப் பதில் சொன்னது அம்மா ஒட்டகம்

'பல்லும் நாக்கும் இவ்வளவு தடியா கெட்டியா இருக்கே..அது ஏன்' இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.

அம்மா ஒட்டகம் சொன்னது'பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சுவைத்துத் தின்ன வேண்டாமா?

இப்போது குட்டி பட்டென்று கேட்டது.'இதையெல்லாம் வைத்துக் கொண்டு இந்தக் குளிர்ல லண்டன் மிருகக்காட்சி சாலையில நாம ரெண்டு பேரும் என்ன செய்துகிட்டிருக்கோம்?

இது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு சிறப்பு மலரில் வாசித்தது.

1 comment:

  1. I told one of my students about SriLanka and its weather(80 F) and he asked me Why are you here at 10 F?........

    ReplyDelete