சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கடந்த 6ம் திகதி ஆரம்பமாகி 9ம் திகதி ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது. பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இந்த மாநாடு நடந்து முடிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதி நாளன்றே என்னால் கலந்து கொள்ள முடியுமாக இருந்தது. செவ்விதாக்கம் தொடர்பாக நடைபெற்ற முதலாவது அமர்வில் சில பிரயோசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தது. இறுதியில் இராம கிருஷ்ண மிஷனில் கலை விழாக்களை மிகவும் ரசித்திருந்தேன்.
எழுத்தாளர்கள் சந்தித்துக் கொள்ள ஒரு வெளியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அவர்களுக்கள் தொடர்பாடல் உயிர்பெற வேண்டும். எழுத்தாளர் களுக்கு மத்தியில் சகோதர வாஞ்சையை அதிகரிக்க வேண்டும் என்பனவே இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கமாக இருந்ததே தவிர யாருக்கும் பொன் னாடை போர்த்துவது இதன் நோக்கமாக இருக்கவில்லை என மாநாட்டின் ஒருங் கினைப்பாளர் முருகபூபதி அவர்கள் குறிப்பிட்டார்கள்.
மாநாடு சில புதிய அனுபவங்களைத் தந்தது. பலரைச் சந்திக்கவும் கதைக்கவும் முடிந்தது.ஒன்றாகத் தேநீர் அருந்தக் கிடைத்தது.இதுதான் இந்த மாநாட்டின் சாதனை. மாறாக இந்த மாநாடு எதிர்புக்களைக் கடந்து நடந்தது முடிந்தது என்பது சாதனையல்ல என முருகபூபதி அவர்கள் சொன்னார்கள். அது பிடித்தி ருந்தது.
எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளர் முருகபூபதி அவர்களுடன்.
டொமினிக் ஜீவா அவர்களுடன்
பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் சிறிதர சிங் அவர்களுடன்
சிறிதர சிங் மற்றும் பிரான்ஸ் அறிவாலயம் புத்தகசாலை உரிமையாளருடன்
கலை நிகழச்சியின் போது
so you are now one of them grt really happy
ReplyDeleteEluththup pani thodarattum...
ReplyDeletemasha allah
ReplyDelete