Tuesday, February 8, 2011

அந்தியில் எழும் கவிதை...



சொந்த ஊரின் வாசம் தொலைத்து
நகரங்களில் வசிப்பவர்களுக்கு
வருத்தத்தையே கொடுக்கிறது
தனிமை.

ஒரு மழைத்துளியின் அடர்த்தி போல
எப்போதும் அது ஈரத்தைத் தருகிறது

யாருடனாவது தொலைபேசியில் பேச
இறந்தவைகளை மீட்டிப் பார்க்க
வைக்கிறது

பிறகு
எதையாவது நினைக்க வைத்து
கவனத்தைக் கலைக்கிறது

இழந்தவைகளை
அடையத் தூண்டுகிறது

மறக்க முடியாத ஒரு நிகழ்வை
அடிக்கடி நினைக்க வைத்து

இதயத்தை கனக்க வைத்துவிடுகிறது
வாழ்வை நொந்து கொள்ளச் செய்கிறது

ஒரு பட்டாம் பூச்சியின் சிறகுகள்
உதிர்வது போல
சந்தோசத்தை உதிர்த்துவிடுகிறது

நினைவின் எல்லாத் தொலைவுகளையும்
ஒரு முறை சுற்றி வந்து
நடுக்கத்தை ஏற்படுத்துகின்றது.

வெறுமை என்றால் என்னவென்பதை
நமக்குக் கற்பிக்கின்றது.

மறைந்திருக்கும் கண்ணீர்த் துளிகளை
வரவழைத்துவிடுகிறது

பின்
இந்த அந்தியில் எழும் இந்தக்
கவிதையை
எழுத வைத்துவிடுகிறது
தனிமை
                    2011.02.07

4 comments:

  1. யாதும் உண்மை
    உண்மையை தவிர வேறோன்றும் இல்லை
    superb

    ReplyDelete
  2. Itz abzlutly corect.....
    I luv very much..

    ReplyDelete