//இரவும்
பகலும் என் நாடி நரம்புகளில்
ஓடும் அதே வாழ்க்கையருவிதான் உலகமெலாம்
ஓடி தாள லயங்களுடன் களி
நடனம் புரிகிறது. பூமியின் துணிக்கைகள் வழியாக எண்ணற்ற புல்வெளியில் ஆனந்தமாய் அரும்பி.. ஆரவாரமாக அலைபாயும் இலைகளாயும் பூக்களாயும் சட்டென்று வடிவம் கொள்வதும் அதே வாழ்க்கைதான்.// ரவீந்திரநாத்
தாகூர்(மொழிபெயர்ப்பு- பீ.எம்.எம்
இர்பான்)
தட்டு தெகே இஸ்கோலே තට්ටු දෙකේ ඉස්කෝලේ (இரண்டு மாடிப் பாடசாலை) சர்வதேசத்தின் கவனத்தை வென்ற மற்றொரு சிங்களத் திரைப்படம். பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்குமான திரை விருந்தாக இருக்கிறது இத் திரைப்படம்.