Monday, December 5, 2022

எப்போதும் நான் புத்தகங்களின் காதலனாக இருக்கவே விரும்புகிறேன் - இன்ஸாப் ஸலாஹுதீன்

 


உங்களை பற்றிய ஒரு அறிமுகம்?

 நான் இலங்கையின் மத்திய மலை நாட்டில் படுபிடிய எனும் கிராமத்தில் பிறந்தேன். கூலித் தொழிலாளிகள் நிறைந்த ஒரு கிராமம் அது. தேயிலைத் தொழிலை அதிகமானோர் தம் வாழ்வாதாரத்திற்காக செய்து வந்தனர். உம்மா,வாப்பா இரண்டு சகோதரர்கள்,ஒரு குட்டித் தங்கை.திருமணம் முடித்து இரண்டு மகன்கள்  இருக்கிறார்கள். ஒரு குட்டிக் குடும்பம் தூக்கணாங்குருவிக் கூட போல.

Thursday, October 20, 2022

வாசிப்பு கௌரவமான செயல் என்பதை புதிய தலைமுறைக்குப் புரிய வைக்க வேண்டும் - பேராசிரியர். லியனகே அமரகீர்த்தி


பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை குருநாகலில் உள்ள கிராமியப் பாடசாலை ஒன்றில் பெற்றுக் கொண்டார். 1990 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர்,  1998 ஆம் ஆண்டு தனது முதுகலைப் படிப்பிற்காக Wisconsin பல்கலைக்கழகம் சென்றார்.

Thursday, March 24, 2022

கசபத் – நுகர்வியத்திற்கு எதிரான குரல்



பாடல்கள் முடிந்து விடும்

ஆனால் வாழ்க்கை தொடர்ந்து வரும்…“

- நாகா நாட்டுப்புற பாடல் வரி

 

இந்த வாழ்க்கை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சித்திரத்தைக் கொடுக்கிறது. அல்லது ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு ஒவ்வொரு சித்திரத்தைக் கொடுக்கின்றனர். வாழ்க்கை பற்றிய புரிதலும் வாழ்வில் முதன்மைப்படுத்தல்களும் ஆளுக்காள் வேறுபடுகிறது.