‘வாழ்க்கை என்பது
ஒரு மலையேற்றம்.மலை ஏற ஏற ஒவ்வொன்றும் சிறியதாகி அற்பமாகி பார்வையை விட்டு மறைந்தபடியே
உள்ளன.ஏறி ஏறி உச்சியில் கால்வைத்ததும் மலையே அற்பமாகி மறைந்து விடுகிறது.ஏறும் போதெல்லாம்
நான் நான் என்று நாம் உணர்ந்த சுயமும் அற்பமாகிவிடுகிறது. எல்லாவற்றையும் அற்பமாக்கிவிடும்
வானம் மட்டுமே எஞ்சுகிறது.’ ஜெயமோகன்
ஒரு மழை நாளில்
கடுகண்ணாவை மேட்டுப் பாதையில் பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தது.என் ஜன்னலுக்கு வெளியே
தூரத்தில் தெரியும் மலையை உற்றுப் பார்க்கிறேன்.மழையில் அது நனைந்து கொண்டிருக்கிறது.
உலகம் பூராகவும் உள்ள மலைகள் மழையில் நனைவதும் வெயிலில் காய்வதும் என் நினைவுகளைத்
தட்ட ஆரம்பிக்கின்றன.