Saturday, May 26, 2012

மரணத்தின் நிழலில் நடத்தல்...



வாழ்க்கைப் பாறையின்
மறு திசையில் எதிரொலிக்கிறது
தொண்டைக்கும்
நெஞ்சுக்குமான இடைவெளியில்
ஏதோ ஒன்று
அடைபட்டிருப்பதான வலி

மொத்த ஆயுளின்
அரைப்பகுதி முடிந்து போனதான
மன வலியில்
அங்கலாய்க்கிறது வயது

இதுவரையிலும் புதைந்து போன
மொத்தப் பிணங்களும்
எழுந்து வந்து
என் செவிகளுக்குள்
மரணம் குறித்து ஓதும் பாஷை
கண்ணீரை வரவழைக்கிறது
இரு விழிகளிலும்

வாழ்க்கை
ஓவ்வொரு மூச்சாய்
விட்டு விட்டு
மயானம் நோக்கி நடக்க
அதற்கு முன்னால்
நடந்து போகிறது
மரணம்...


2007 ஆம் ஆண்டு யாத்ரா 18 ஆவது இதழில் வெளியான எனது கவிதை

1 comment:

  1. I have not seen this before . Awesome.
    இந்த கவிதையில் ஒரு வித்தியாசமான மொழி ஒன்று தெரிகிறது , ஒரு முதிர்ச்சி . ஏனோ மயான தரிசன நினைவுகள் மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறது

    ReplyDelete