த.வாசுதேவனின் இக் கவிதை நவீன வாழ்வின் புற,அக அம்சங்களை அழகிய முறையில் பதிவு செய்திருக்கிறது. படித்ததில் பிடித்த இக்கவிதையையை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
குரைப்பதற்கு நாய்கூட இல்லை
வீடுகளின் குழந்தைகள்
ரெசிடென்சியல் பள்ளிகளில் படிக்கிறார்கள்.
பெரியவர்கள்
முதியோர் இல்லத்தில்
இறப்பதற்காக காத்திருக்கிறார்கள்.
எறும்புகளைக் கூட
மருந்து வைத்துக் கொன்றுவிட்டோம்.
குப்பைகளைக் கூட
பக்கத்து வீட்டுப் புறக்கடைகளில்தான்
கொட்டுகிறோம்.
கொசுக்களையும்
பூச்சிகளையும்
சுருள்வத்தியால் கொல்கிறோம்.
பல்லிகளைக் கொல்லவும்
வழிவகைகள் காண்போம்.
வாசலுக்கு கான்கிரீட் போட்டுவிட்டால்
தவளைகள் இருக்காது.
காம்பவுன்ட் வால் கட்டிவிட்டால்
பாம்புகள் வராது.
மரங்களை வெட்டிவிட்டால்
பறவைகள் இருக்காது.
குயில் சத்தமும் இருக்காது.
எச்சமும் இருக்காது.
தங்கத்தை பேங்க் லாக்கரில்
வைத்திருப்பதால் திருடர்களும் வரமாட்டார்கள்.
மிச்சமிருக்கும் உணவை
வைப்பதற்கு ஃபிரிட்ஜ்
இருப்பதால் பிச்சைக்காரன்கூட
இங்கு வரமாட்டான்.
அருகில் இருப்பவனிடம்
எதற்குப் பேசுவது?
கைபேசி இருக்கிறது
தூரத்தில் உள்ள உறவோடு பேச
ஏ.டி.எம் இல் பணம் இருக்கிறது
செலவு செய்ய.
நாங்கள் அநேகமாக அலுவலகத்தில்தான்
இருக்கிறோம்.
வாடிக்கையாளரும்,எஜமானும்
வெளிநாட்டில் இருக்கிறார்கள்.
தமிழில் பேசுவது அரிதுதான்
மம்மி மொழி போதும் நமக்கு.
வீடு பெரும்பாலும் பூட்டித்தான் இருக்கிறது.
மனசும்தான்.
இந்த வீட்டில் டி.வி மட்டுமே
பேசவும் பாடவும் செய்யும்.
இந்த வீட்டில்தான் கதவுகளை நன்கு சாத்தியபடி
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
Realy nice
ReplyDeleteவாசுதேவனின் கவிதைப்பகிர்வுக்கு நன்றி அத்தோடு உங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://mmajees.blogspot.com/
Nice one
ReplyDeletethanks friends
ReplyDelete