Sunday, May 8, 2011

குட்டிக் கதையொன்று...


ஒரு நாள் ஒரு சிறுமி தனது தந்தையுடன் பாலம் ஒன்றின் மீது நடந்து சென்று கொண்டிருந்தால்.அவளது தந்தை தன் மகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.அதனால் மகளே! நீ ஆற்றினுள் விழுந்து விடாமல் இருக்க, எனது கையைப் பற்றிக் கொள் என்றார்.

அதற்கு அந்தச் சிறுமி இல்லை தந்தையே! நீங்கள் எனது கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றால். ஏன் இப்படிச் சொல்கின்றாய்? என்று ஆச்சரியமாகக் கேட்டார் தந்தை.

அதற்கு அந்தச் சிறுமி, 'நான் உங்களது கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஏதும் ஆபத்து நிகழுமென்றால் நான் எனது கையை விட்டுவிட இடமிருக்கின்றது. ஆனால் நீங்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டால் எது நேர்ந்தாலும் என்னை நீங்கள் விட்டுவிட மாட்டீர்கள்' என்றால்...

எந்தவொரு  உறவின் நம்பிக்கையின் அடிப்படை அதனது பிணைப்பிலேயே தங்கியிருக்கின்றது. எனவே நீங்கள் நேசிப்பவரது கரங்களை பற்றிக் கொள்ளுங்கள். அவர் உங்களது கரங்களை பற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

இந்தக் கதையை ஆங்கிலத்தில் படித்தேன்.மொழி பெயர்த்து உங்களுடனும் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.எழுதியவர் பெயர் இருக்கவில்லை.அவருக்கு நன்றி.


1 comment:

  1. nice you have started to translate English ones. Keep up .

    ReplyDelete