Sunday, February 13, 2011

ஈரான் திரைப்பட வாரம்

ஈரான் திரைப்பட வாரம் கடந்த 7ம் திகதி முதல் 11ம் திகதி வரை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது.ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் 32 வது வரு டத்தை முன்னிட்டே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயக்குனர் பௌ ரான் தெராக்ஷாந்தேயின் 5 திரைப்படங்கள் திரையிடப்பட்டதோடு 12ம் திகதி இயக் குனரோடு கலந்துரையாடலும் இடம் பெற்றது.ஜந்து நாட்களும் இயக்குனர் அவர்கள்  இந்த நிகழ்வில் கலந்து கொண் டது இங்கு முக்கியமானது.
 
  பௌரான் தெராக்ஷாந்தே 1951ல் பிறந்தவர். இவர் ஒரு இயக்குனர், எழுத் தாளர், ஆய்வாளர்.1975ல் சினிமாத் துறை யில் பட்டம் பெற்றார்.ஆரம்பத்தில் அதிக மான ஆவணப்படங்களையே தயாரித் தார்.இவர் ஈரானின் முதல் பெண் திரைப் பட இயக்குனர் மற்றும் ஹொலிவூடில் படம்  தயாரித்த முதல் ஈரானியருமாவார்.



Relationship (1986), A little bit Happiness (1987), Passing Through the Dust(1988), Lost Time(1989),A Love Without Frontier(1998), Candle in  the Wind(2003),Wet Dream(2005), Eternal children2006), Twenty (2008)  Professionals(2008) Endless       Dream(2009)என்பன இவரது திரைப்ப டங்களாகும்.
 
 
இவர் தனது படங்களுக்காக பல தேசிய மற்றும் சர்வதேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.  பௌரான் தெரா க்ஷாந்தே  Khovarmehr Film corporation  இன் பிரதித் தலைவராவார். அவரைச் சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்புக் கிடைத்தது. நீங்கள் எனது படங்களைப் பார்த்து ரசிப்பதும் கருத்துச் சொல்வதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார்.
 
 

அவரது
A Love Without Frontier(1998), Eternal Children (2006), Twenty(2008),   Wet Dream(2005) Lost Time(1989) ஆகிய படங்கள் இலங்கையில் திரையிடப்பட்டன. படங்கள் குறித்த விமர்சனத்தை வரும் நாட்களில் எதிர்பாருங்கள். இன்ஷா அல்லாஹ்.
 
 
 
 பௌரான் தெராக்ஷாந்தேயுடன்

 
 

2 comments:

  1. so brother when is the subtitled one... ...shall we do it??? ..(dry DREAMS)

    ReplyDelete
  2. Sir Nice to See you With Great Director. So when you will become a Director?

    Rahman Hassen

    ReplyDelete