Wednesday, December 15, 2010

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே...


நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம சொப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ

வானகமே இள வெயிலே மரச்சரிவே...
வானகமே இள வெயிலே மரச்சரிவே...
நீங்கள் எல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழை தானோ!
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய் தானோ

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம சொப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
காலம் என்றே ஒரு நினைவும்
காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்கு குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய் தானோ

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே...

http://www.youtube.com/watch?v=nx91opkZ09I&feature=player_embedded#!
 
 இந்தப் பாடலை 2002 ம் ஆண்டு ஆசிரியர் இத்ரீஸ் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.இப்பாடலை எப்போது கேட்டாலும் அவர் நினைவுகளும் ஜாமிஆவின் முதல் வகுப்பும் தான் ஞாபகத்தில் வருகின்றன.

1 comment:

  1. பாரதியார் ஞாபகத்துக்கு வரமாட்டாரா?

    ReplyDelete