மழை நாட்களில் தலைநகரம்; அழகாகக் காட்சியளிப்பதே இல்லை. எங்கும் நீர் நிறைந்திருப்பதால் வெளியில் செல்ல மனம்வராது. மழையை ரசிப்பதற்கு இங்கு அவகாசமே இல்லை. நீரில் மிதக்கும் வீடுகளைப் பார்க்கும் போது ஆத்திரமே மேலெழும். மழை வாழ்க்கையின் போக்கையே ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது.
அன்று அடை மழையில் குடையை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றேன். கொழும்பில் வாகன நெரிசலில் குடை பிடிப்பது பெரும்பாடுதான். தெருவில் சிங்கள மூதாட்டியொருவர் தன்னை தெருவின் மறு முனைக்கு கொண்டு போய்விடுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.யாரும் அந்த அழைப்பை உள்வாங்கவில்லை.
அப்போது அவர் என்னை அழைத்தார். தெருவின் அடுத்த முனைக்கு அவரை அழைத்துச் சென்றேன். நன்றி மகனே! கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.. அவன் அருள் உனக்குக் கிட்டட்டும் என மறுபடி மறுபடி பிரார்த்தித்தார்.
அ.முத்துலிங்கம் அவர்களின் ஓரு நாளைக்கு ஒரு நன்மை என்ற கட்டுரையை நினைத்துக் கொண்டு நான் நடந்து கொண்டிருந்தேன்...
No comments:
Post a Comment