இலங்கை முஸ்லிம்களின்
ஒலிக்கலைகள் மற்றும் பாடல் மரபுகளை ஆராயும் “மினாரத்“ ஆவணப்பட இயக்குனருடனான நேர்காணல்
நாத்யா
பிமானி பெரேரா திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார்.
இவரது ஆவணப்படம் மற்றும் புனைகதை படைப்புகள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நாத்யா, நெதர்லாந்து
சமூகக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தில்
எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார். '4th of February' ரிஸானா நபீக் தூக்கிலிடப்பட்ட ஆண்டு அவரது தலைவிதியைப் பற்றியும், வீட்டு வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்ற மீண்டும் செல்ல இருக்கின்ற இலங்கைப் பணியாளர்களைப் பற்றியும் பேசுகிற அவரது முதல் ஆவணப்படம்.