உங்களை பற்றிய ஒரு அறிமுகம்?
நான் இலங்கையின் மத்திய மலை நாட்டில் படுபிடிய
எனும் கிராமத்தில் பிறந்தேன். கூலித் தொழிலாளிகள் நிறைந்த ஒரு கிராமம் அது. தேயிலைத்
தொழிலை அதிகமானோர் தம் வாழ்வாதாரத்திற்காக செய்து வந்தனர். உம்மா,வாப்பா இரண்டு
சகோதரர்கள்,ஒரு குட்டித் தங்கை.திருமணம் முடித்து இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஒரு குட்டிக் குடும்பம் தூக்கணாங்குருவிக்
கூட போல.