Thursday, March 24, 2022

கசபத் – நுகர்வியத்திற்கு எதிரான குரல்



பாடல்கள் முடிந்து விடும்

ஆனால் வாழ்க்கை தொடர்ந்து வரும்…“

- நாகா நாட்டுப்புற பாடல் வரி

 

இந்த வாழ்க்கை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சித்திரத்தைக் கொடுக்கிறது. அல்லது ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு ஒவ்வொரு சித்திரத்தைக் கொடுக்கின்றனர். வாழ்க்கை பற்றிய புரிதலும் வாழ்வில் முதன்மைப்படுத்தல்களும் ஆளுக்காள் வேறுபடுகிறது.