Sunday, July 19, 2015

கொங்க்ரீட் காடுகளில் தொலையும் வாழ்க்கை




“கிராமம்,பாட்டிகளின் சுருக்குப் பையில் உள்ள சில்லறைகளைப் போன்றது.சுருக்குப் பைகளின் உலகம் வேறு உலகம்.அதன் முடிச்சுக்கள் பிரியங்களால் ஆனவை.காலத்தின் இடுப்பில் அதே பழைய வாஞ்சையுடன் நிராதரவாய்த் தொங்கிக் கொண்டிருப்பவை.அதன் எளிமையும் அழகும் எந்தவிதத்திலும் நம்மை நோக்கிச் சவால் விடாதவை. ஒரு மலைப் பிரதேசத்துக் காற்று மாதிரி எப்போது கேட்டாலும் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் எடுத்துக் கொடுக்க,அதில் இன்னமும் சில்லறைகள் இருந்து கொண்டிருக்கின்றன…மாநகரம் அப்பாவின் சட்டைப் பையில் உள்ள ரூபாய் நோட்டுக்களைப் போன்றது.அப்பாவின் உலகம் திறக்கவே முடியாத கதவுகளால் ஆனது.அதன் ஒவ்வொரு வாசலிலும் கண்டிப்புகளால் ஆன கனத்த பூட்டு.“ நா.முத்துக்குமார்