ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு உலகம் முடிந்து போகிறது
என்பார்கள்.வயோதிபம் ஒரு காவியத்தின் முடிவுறும் தருணம் போன்றது. அவ்வளவு பரிவு
மிகுந்த அந்த வயதின் இயல்புகளை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாது.வாழ்க்கையை
முடித்துக் கொள்ளக் காத்திருக்கும் ஒருவரை நாம் நெருக்கமாகக் காணும் போது முகத்தின்
மீது படிந்துள்ள மரணத்தின் ரேகைகள் சொல்ல முடியாத வலியை ஏற்படுத்திவிடுகிறது.