நீ மன்னித்துவிட விரும்பியிருக்கலாம்
நான் சரிசெய்ய முயன்றிருக்கலாம்
ஆனால் இவையெல்லாம் நிகழ்ந்தது
கருணையற்ற ஒரு கோடையில்
அவரவர் பொருளை
அவரவர் வைத்துக் கொள்ளலாம்
அவரவர் நினைவுகளை
அவரவர் பிரித்துக் கொள்ளலாம்
யாருடையதென பிளவுபடாத ஒன்றை
மனம் கசந்த உறுதியுடன்
கைவிட்டுச் செல்லலாம்
எல்லாம் எதற்காகவென்று
கடைசிவரை
உனக்கும் தெரியவில்லை
எனக்கும் தெரியவில்லை
நன்றி- அதீதத்தின் ருசி
No comments:
Post a Comment