18 ஆவது லன்டன்
ஆசிய திரைப்பட விழாவில் முதலாவது திரையிடப்பட்ட இலங்கைத் திரைப்படம் “sulanga apa
ragena yawi'.இது தவிர சுமார் எட்டுக்கும் மேற்பட்ட சர்தேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேசத்தின்
கவனத்தைப் பெற்றுள்ளது. இத் திரைப்படம் ஸ்டீவன் ஸ்பில் பேர்க் தனது முதலாவது திரைப்படத்திற்காக
வென்ற ரெமி விருதை ஹுஸ்டன் திரைப்பட விழாவில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச
மட்டத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, கவனத்தைப் பெற்றிருக்கும்
இத் திரைப்படம் இப்போது இலங்கையில் திரையிடப்படுகிறது.
Monday, March 25, 2019
Friday, January 11, 2019
இனவாதம் தோற்றுப் போன ஒரு கோஷம் - இயக்குநர் அசோக ஹந்தகம
அசோக ஹந்தகம
சர்வதேச அரங்கில் நன்கு அறியப்பட்ட இலங்கையின் முக்கிய திரைப்பட இயக்குநர். களனிப்
பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் இங்கிலாந்தின் Warwick பல்கலைக்கழகத்தில் அபிவிருத்திப் பொருளியலில் முதுகலைமாணிப்
பட்டத்தை பெற்றுக் கொண்ட இவர் பல்வேறு கலைப்படைப்புக்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.இவரது
திரைப்படங்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் பல விருதுகளை வென்றிருக்கின்றன.தொலைக்காட்சி நாடகம் மேடை நாடகம்,சினிமா என பல தளங்களில் இவர் தொடர்ந்தும்
இயங்கி வருகிறார்.அதே நேரம் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகப் பணியாற்றுகிறார்.
சந்திப்பு –
இன்ஸாப் ஸலாஹுதீன்
Friday, January 4, 2019
பெண்களது பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம் என்றால் சமூகத்தில் 51 வீதமான வளத்தை பயன்படுத்தாமல் வைத்திருக்கிறோம் - முஹம்மத் ரியாஸ்
![]() |
| முஹம்மத் ரியாஸ் - மனிதாபிமான உதவிகளுக்கான முகாமையாளர்- ஒக்ஸ்பாம் |
முஹம்மத் ரியாஸ்
உடுநுவரை தஸ்கரையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.ஹன்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையில் கல்வியைப்
பெற்றுக் கொண்ட இவர் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிய ஆர்வம் கொண்டு இத்துறையைத்
தேர்நதெடுத்தார். போதை எதிர்ப்பு, முரண்பாட்டு முகாமைத்துவம், மனிதாபிமான உதவி என பல
தளங்களில் பணியாற்றியுள்ளார். school for international training Boston அமெரிக்க பல்கலைக்கழகத்தில்
அனர்த்தம் தொடர்பாகவும் அவுஸ்த்திரேலியா Deakin பல்கலைக்கழகத்தில் மனிதாபிமானத் தலைமைத்தும்
தொடர்பாகவும் கலைமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.ஒக்ஸ்பாம்,கெயார்,
இண்டர்நஷனல் அலார்ட் போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம்
கொண்டவர்.25 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ள இவர் தற்போது ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் சர்வதேச
அலகில் பணியாற்றுகிறார். பங்களாதேசில் 10 இலட்சம் மியன்மார் அகதிகள் தங்கியிருக்கும்
முகாமில் மனிதாபிமான உதவிகளுக்கான பொறுப்பாளராக பணியாற்றுகின்ற போது அவருடன் மேற்கொண்ட
நேர்காணல் இது.
Thursday, January 3, 2019
சமூகங்களுக்கிடையிலான இடைவெளிகளை நிரப்ப கலைஞர்கள் முன்வர வேண்டும். - நிலார் என்.காஸிம்
சுமார் 600 இற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இலங்கையின் சிங்களப் பாடல்களின் போக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்தவர்.தமிழ் இலக்கியத்தை சிங்கள மொழிக்கு கொண்டு செல்வதில் காத்திரமான பங்களிப்பையும் வழங்கியுள்ளார். இரண்டு மொழிகள் ஊடாக மூன்று சமூகங்களை இணைக்கின்ற ஒரு பாலமாக இவர் இருக்கிறார்.
தற்போது இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபணத்தில் விளம்பரம் மற்றும் ஊடகப் பிரிவின் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றுகிறார்.
அவருடைய 25 வருட கலை வாழ்க்கைக்கு வாழ்த்துக் கூறி இந்த நேர்காணலை மேற்கொள்கிறேன்.
மக்கள் தாம் இழந்தைவைகளுக்காகவே நீதி கோருகின்றனர் - அனுஷா சிவலிங்கம்
சிவலிங்கம்
அனுஷா கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கொழும்பு பல்கலை கழகத்திற்கு தெரிவாகி ஊடகத்துறை
பட்டபடிப்பை நிறைவு செய்து தற்போது ஊடகத்துறை , மொழிபெயர்ப்பு , புகைப்படத்துறை , எழுத்துத்துறை
ஆகியவற்றுடன் சேர்ந்து பயணிக்கிறார்.சிங்கள மொழியில் இவர் பெற்றுள்ள புலமையினால்
இதுவரை முக்கியமான இரண்டு நூல்களை சிங்களத்துக்கு மொழி மாற்றம் செய்துள்ளார். இன்னும்
இரண்டு நூல்கள் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழியிலும் சிங்கள
மொழியிலும் ஊடாடும் அனுஷா போன்றவர்களால் சமூகங்களுக்கிடையிலுள்ள இடைவெளிகளைக்
குறைப்பதில் மகத்தான பணிகளை மேற்கொள்ள முடியும்.ஒரு சிங்கள நூல் வெளியீட்டு
விழாவில்தான் அனுஷாவை முதலில் சந்தித்தேன்.இது அவருடனான நேர்காணல்.
Monday, July 2, 2018
Wednesday, April 11, 2018
Tuesday, March 27, 2018
Subscribe to:
Posts (Atom)









