Wednesday, July 20, 2016
எனது புதிய இணையதளம் www.insafsalahudeen.com
Wednesday, May 4, 2016
Sunday, April 24, 2016
Wednesday, January 20, 2016
Wednesday, January 13, 2016
ஹோகானா பொகுன- வானம் போல விரியும் கனவுகள் தேடி...
பார்த்துத் தீராத
ஒரு ஆச்சரியமாக கடல் நமக்கு முன்னாள் விரிந்து கொண்டே இருக்கிறது. கடலும் அதன் அலைகளும்
அது எழுப்பும் சத்தமும் இந்த உலகில் எல்லோரையுமே கவர்ந்திருக்கின்றன.கடலைப் பார்த்திராத
ஒரு கிராமத்து மாணவர்கள் கடல் பார்க்க ஆசைப்படுவதும் அதனூடு விரியும் நினைவுகளையும்
மையப்படுத்தி அண்மையில் வெளிவந்த திரைப்படம்தான் “ஹோகானா பொகுன“ இத் திரைப்படம் 3 சர்வதேச
விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, September 29, 2015
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
‘வாழ்வதற்கான பக்குவத்தை
யாரும் திருமணப் பத்திரிகையில் அச்சடிப்பதில்லை’
இந்த வாசகத்தை என்
முகநூல் பக்கத்தில் எப்போதோ நான் பகிர்ந்திருக்கிறேன். இச் சிறிய வாசகத்தில் ஆயிரம்
அர்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. திருமணம் என்பது வாழ்க்கையில் நடக்கும் ஒரு முக்கிய
நிகழ்வு. பிறந்ததற்குப் பிறகு மனிதன் கொண்டாடப்படும் இரண்டாவது தருணம் அது.வாழ்க்கையில்
ஒரு துணையைத் தேடுவதும் தெரிவு செய்வதும் மனிதனுடைய ஏனைய எல்லாத் தெரிவுகளையும் தேடல்களையும்
விட வித்தியாசமானதாகவும் விசித்திரமானதாகவும் இருக்கிறது.
Monday, September 21, 2015
நல்ல படம் எடுப்பவர்களை உருவாக்குவதும் அவற்றைப் பார்ப்பதற்கு மக்களை தயார் பன்னுவதுமே எமது பணி - தமிழ் ஸ்டுடியோ அருண்
அருண்,இந்தியாவைச் சேர்ந்தவர்.
லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் திரைப்பட டிப்ளோமோ முடித்திருந்தாலும் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடாமல், தமிழ்
குறும்படங்களை
ஊக்குவிக்கும்
பாதையை தேர்ந்தெடுத்தவர்அருண்.2008 ஆம் ஆண்டு thamizhstudio.com என்ற
இணையத்தை ஆரம்பித்தார். துவங்கும் போது
குறும்பட ஆர்வலர்களுக்கான
ஒர் இணைய வெளியாகவே அது
இருந்தது. ஆனால் அடுத்த வருடமே
அருண் அதை ஒரு
இயக்கமாக மாற்றினார்.
Sunday, July 19, 2015
கொங்க்ரீட் காடுகளில் தொலையும் வாழ்க்கை
“கிராமம்,பாட்டிகளின் சுருக்குப் பையில் உள்ள சில்லறைகளைப் போன்றது.சுருக்குப் பைகளின் உலகம் வேறு உலகம்.அதன் முடிச்சுக்கள் பிரியங்களால் ஆனவை.காலத்தின் இடுப்பில் அதே பழைய வாஞ்சையுடன் நிராதரவாய்த் தொங்கிக் கொண்டிருப்பவை.அதன் எளிமையும் அழகும் எந்தவிதத்திலும் நம்மை நோக்கிச் சவால் விடாதவை. ஒரு மலைப் பிரதேசத்துக் காற்று மாதிரி எப்போது கேட்டாலும் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் எடுத்துக் கொடுக்க,அதில் இன்னமும் சில்லறைகள் இருந்து கொண்டிருக்கின்றன…மாநகரம் அப்பாவின் சட்டைப் பையில் உள்ள ரூபாய் நோட்டுக்களைப் போன்றது.அப்பாவின் உலகம் திறக்கவே முடியாத கதவுகளால் ஆனது.அதன் ஒவ்வொரு வாசலிலும் கண்டிப்புகளால் ஆன கனத்த பூட்டு.“ நா.முத்துக்குமார்
Wednesday, May 27, 2015
வளவையின் மடியிலே:ஒரு சிறிய குறிப்பு
மானுடப் பெறுமானங்களுக்காக
நேர்மையுடனும் துணிச்சலுடனும் இயங்கிய ஒரு கலைஞர் எம்.எச்.எம் ஷம்ஸ். தென்னிலங்கை
மாத்தறை மாவட்டத்திலுள்ள திக்குவல்லை எனும் கிராமத்தில் 1940.மார்ச்
17 இல் பிறந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில்
பட்டம்பெற்று இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த
இவர் பல உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும்
தமிழாசிரியராகப் பணியாற்றி இறுதியாக மதுராபுரி அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டின் இறுதியில்
ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்
பின்னர் இலங்கையின் நாளேடான தினகரன் ஆசிரிய
பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
ஷம்ஸ் அவர்கள்
சிறுகதை,நாவல்,கவிதை,பாடல்,இசை,மொழிபெயர்ப்பு என பல துறைகளுடன் இயங்கியவர்.அவரது
15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வளவையின்
மடியிலே அண்மையில் வெளிவந்துள்ளது.அவர் மரணித்து 13 ஆண்டுகளின் பின்னர் இத்தொகுதி வெளிவந்துள்ளது
என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
Monday, May 11, 2015
இன்னும் கொடுக்காத பரிசு…
“கொடுப்பவரின்
விருப்பமும் பெற்றுக் கொள்பவரின் விருப்பமும் இணையும் ஒரு அபூர்வமான தருணத்தில்தான்
ஒரு உண்மையான பரிசு உருவாகிறது.வாழ்க்கையில் எல்லா பரிசுகளுக்கும் ஒரு விலை இருக்கிறது.அது
கடையில் செலுத்தப்படும் விலை மட்டுமல்ல:நமது வாழ்க்கையில் செலுத்தும் விலை.நமது இதயத்தின்
ஆழத்தில் செலுத்தும் விலை அது.“ மனுஷ்யபுத்திரன்.
பரிசுகள் கொடுப்பதும்
எடுப்பதும் ஒரு சம்பிரதாயம் மட்டுமல்ல அது ஒரு வாழ்முறை.உறவுகளை அன்பினால் பிணைக்கும்
பெருங் கருணை அது. கடந்த காலத்தின் நினைவுகள் போல பரிசுகளும் வாழ்க்கையின் சுவடுகளாக
இதயத்தில் தங்கிவிடுகின்றன.
Subscribe to:
Posts (Atom)








