கலாநிதி லியனகே அமரகீர்த்தி
குருநாகலை,குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர். தனது
கிராமத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில்
நுழைந்த இவர் 2000 ஆம் ஆண்டு தனது முதுகலைமாணிப் பட்டத்தை இலக்கியத்துறையில் விஸ்கொன்ஸின்
பல்கலைக் கழகத்தில் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டததையும் பெற்றுக்
கொண்டார்.ஒரு சிறந்த எழுத்தாளரான இவர் இதுவரை புனைகதை, கவிதை,இக்கியக் கோட்பாடு குறித்து
15 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
Monday, March 24, 2014
Thursday, March 13, 2014
புன்னகை தர்மம்
Monday, March 10, 2014
Thursday, January 16, 2014
Tuesday, December 24, 2013
இங்கிருந்து...மலையகத்தின் வாழ்வியல் பதிவுகள்
இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் 1950 களுக்கு முன்னரே
இருந்திருக்கின்றன.அரை நூற்றாண்டுகளைக் கடந்த நிலையில் இலங்கைத் தமிழ் சினிமா
வரலாற்றுப் பாதையில் நவீன பரிமாணமாக “இங்கிருந்து“ நம்முன் நிற்கிறது.பேராதனைப்
பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவர், கலாநிதி சுமதி சிவமோகன் இப்படத்தை எழுதி
இயக்கியுள்ளார்.
Monday, December 9, 2013
சமூக அமைப்பில் மாற்றங்கள் சாத்தியம் ஆகும் போது திரைப்படத்திலும் சாத்தியம் ஆகும்
ராம் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர். சென்னை கிறித்துவ கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம்
பெற்றவர். இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் சில படங்களில் உதவி இயக்குனராக பணி
செய்துள்ளார். 2007 ஆம்
ஆண்டு இவரின் முதல் படைப்பான “கற்றது தமிழ் “ வெளியானது.அண்மையில்
இவரது இயக்கத்தில் வெளியான அப்பா மகள் உறவைச் சித்தரிக்கும் “தங்கமீன்கள்“ தமிழில்
முக்கிய ஒரு படமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நேர்காணலை வழங்க ராம் விருப்பம்
தெரிவித்தார்.தனது இக்கட்டான பணிச் சூழலில் உரிய நேரத்தில் இதனைச் செய்து தர
முடியவில்லை என்று வருந்தினார்.ஒரு உண்மையான படைப்பாளியின் எளிய குணமும் பிரியமும்
அவனது படைப்பையே சிறந்ததாக மாற்றுகிறது.ராமுடன் தொடர்பு கொள்ள உதவி செய்த நண்பர்
பஷீர்,கேள்விகளை திருத்தி செம்மைப்படுத்திய நண்பர் அமீர் அப்பாஸ் இருவருக்கும் நன்றிகள்.
Monday, December 2, 2013
குனசிறி மஹத்தயா- நெஞ்சைத் தட்டும் நினைவு
“ஒரு எறும்புக்குக் கூட நான் அநியாயம் செய்ய நினைப்பதில்லை. என்னை ஏன்
நரகத்தில் போட வேண்டும்“ குனசிறி அவர்களை நினைக்கும் போது அவர் சொன்ன இந்த
வார்த்தைகள்தான் எனக்கு நினைவில் வருகிறது.அவசரமாய் நிகழாது என்று நினைத்த ஒரு
மரணம் குறித்த செய்தி என் செல்போன் திரையில் தோன்றியது.
எல்லா மரணச் செய்திகளும் வாழ்க்கையின் நிச்சயமின்மையை திரும்பத் திரும்ப
நினைவுபடுத்துகின்றன.
Friday, November 22, 2013
'யாதும்' இந்திய தமிழ் முஸ்லிம் உறவின் வரலாற்றுத் தொன்மை பற்றிய ஆவணப்படம்
ஒரு சமூகத்தின் வராற்றுத் தொன்மை என்பது அது வாழும் எல்லாக் காலத்திலும் தேவைப்படும் ஒன்றாகும்.ஒவ்வொரு சமூகமும் தம் வரலாற்று வேர்ககள் குறித்த விசாரனையை மேற்கொள்ள வேண்டும்.ஏனனில் வரலாறு இல்லாத சமூகம் தனது தனித்துவத்தையே இழந்துவிடும்.
அந்தவகையில் தனது வரலாற்றின் வேர்களை நோக்கிய பயணத்தின் நீண்ட தூரத்தைக் கடந்து அதனை ஆவணப்படமாக இயக்கியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த எஸ்.அன்வர்.யாதும் என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணம் இந்திய முஸ்லிம்களது வரலாற்றுத் தொன்மையை தேடிப் பயணிக்கிறது. இந்தியாவின் தமிழ் முஸ்லிம் உறவென்பது நூற்றாண்டு களைக் கடந்தது என்று அது நிரூபிக்கிறது.
Wednesday, November 20, 2013
வாசிக்கக் கற்றுக் கொள்.உலகத்தையே பெற்றுக் கொள்வாய்
'கடந்த ஐம்பது ஆண்டுகளில்
மக்கள்
தொகையும்
கல்வியும்
எத்தனையோ
மடங்கு
விரிவடைந்துவிட்டன.ஆனால் ஒரு நூலின் அச்சிடப்படும்
பிரதிகளின்
எண்ணிக்கை
மாறுதலடையவே
இல்லை.இன்று வாசிப்பை
பல்வேறு
நிலைகளில்
ஒரு
இயக்கமாக
மாற்ற
வேண்டிய
தேவை
தீவிரமடைந்திருக்கிறது'
–தோன்ற மறுத்த தெய்வம்-
புத்தகங்களும்
வாசிப்பும் இந்த உலகின் அறிவுப் பயணத்தில் மிக முக்கிய சாதனங்கள்.வாசிப்பின்றி மனிதன்
பூரணமாவதில்லை.இதனைத்தான் வாசிப்பு மனிதனை முழு மனிதனாக்கும் என்று மரபு வழியாகச் சொல்லி
வருகிறோம்.
Saturday, November 9, 2013
தோன்ற மறுத்த தெய்வம்- காலத்தின் மீதான பதிவு
ஒரு நிகழ்ச்சிக்காக எனது விரிவுரையாளர் ஒருவரை அழைத்துக் கொண்டு செல்லும் நேரத்தில் “தோன்ற மறுத்த தெய்வம்“ புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.மனுஷ்யபுத்திரன் எனும் எழுத்தாளர் அவருக்குப் பரிச்சயம் இல்லை.ஒரு சிறிய அறிமுகம் நான் சொல்ல வேண்டியிருந்தது. மூன்று மணித்தியாலப் பயணத்தில் பெரும் பகுதியில் அவர் நூலை வாசித்துக் கொண்டு வந்தார்.மொழியின் வீச்சும் வேகமும் அபாரம் என்றார்.
Subscribe to:
Posts (Atom)







