Saturday, November 2, 2013

தங்க மீன்கள்- இதயத்தில் பெய்த மழை


“ஒரு வகுப்பிற்கு இரண்டு ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் இருந்தால் நலமாக இருக்கும்.காரணம் ஒருவர் பாடம் நடத்தவும் மற்றவர் மாணவர்களின் செயற்பாடுகளை அருகிலிருந்து கவனிக்கவும் முடியும்.இருவரும் கலந்தாலோசித்து ஒவ்வொரு குழந்தையின் புரிதல் பற்றியும் விவாதித்துக் கற்றுத் தந்தால் விளைவுகள் பிரமாதமானதாக இருக்கும்“ ஜோன் ஹோல்ட்

Tuesday, October 29, 2013

அன்றாட விவகாரங்களிலிருந்து வலுவான செய்தியைச் சொல்லவே நான் முயற்சிக்கிறேன்.-அவன்த ஆடிகல



அரசியல் கேளிச் சித்திரங்களுக்கு உலக அளவில் பெரிதும் வரவேற்பு காணப்படுகிறது.சமகால அரசியலை கேலிச் சித்திரமே ஆழ்ந்த விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது.இலங்கையின் புதிய தலைமுறையைச் சேர்ந்த ஓவியர் அவன்த ஆடிகல தனித்துவமான கேலிச்சித்திரங்களை வரைபவர்.சிறந்த கார்டூனுக்கான விருது இருமுறை இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.“அத“ மற்றும் டேய்லி மிரர் பத்திரிகையில் ஓவியராகப் பணியாற்றுகிறார்.

Tuesday, October 22, 2013

ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை: இடை வெளிகளை இட்டு நிரப்பும் நூல்

காயல்பட்டினம் கே.எஸ்.முஹம்மது ஷுஐப் அவர்கள் எனது நூலுக்கு எழுதிய அறிமுகக் குறிப்பு இம்மாத “சமரசம்“ இதழில் வெளியாகியுள்ளது. நன்றியுடன் இங்கு பிரசுரிக்கிறேன்.
 
ஆன்மீக தளத்தில் இயங்கும் எல்லா மதங்களும் இவ்வுலக வாழ்க்கையை புறக்கணிக்கச் சொல்கின்றன. இஸ்லாத்தை தவிர. இந்த வாழ்வும், இந்த உடலும் நிலையற்றவை. எனவே, அவைகளை பராமரிக்கத் தேவையில்லை என்பது அவைகளின் உள்ளடக்கம். “காயமே இது பொய்யடா...” சித்தர்கள் வாக்கும் இதனடியில் பிறந்ததே.

Monday, October 14, 2013

நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கிறது- கவிதைச் செயல் அனுபவம்



கவிஞர் அஹமது ஃபைஸல் தனது “நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கிறது“கவிதைத் தொகுதியை எனக்கு தபாலிட்டிருந்தார். கவிஞருடன் நெருங்கிப் பழகிய அனுபவமோ அவரை நேரில் சந்தித்ததோ கிடையாது.அவரது அன்பை நான் மெச்சுகிறேன்.
 
புத்தகத்தை எனது குட்டித் தங்கை புரட்டிப் பார்த்தாள்.உள்ளே இருக்கும் அறிமுகக் குறிப்பில் படித்து அவரது “ஆயிரத்தோராவது வேதனையின் காலை“  சிறப்பான தலைப்பு என சிலாகித்தாள்.அப்படியானால் இந்தத் தலைப்பில் அவளுக்குப் பிடிப்பு ஏற்படவில்லை போலும்.பின்னொரு நாளில் இந்தத் தலைப்பை அவள் புரியக்கூடும்.அப்போது அது குறித்து எழுதுவாள் என்று நம்புகிறேன்.

Thursday, August 22, 2013

அதிகாரம் இரத்தத்தை விடவும் சுவையானது...



பிணங்களை ஒதுக்கி
முடியாத வேளையில்
மிதித்தே முன்னேறினேன்
மனிதம் நசுங்கித் தொலைந்தது.

உலகம் கொலைக் களமாக மாறும் ஒவ்வொரு கணமும் இக்கவிதை எனக்குள் தோன்றி என்னை உணர்விழக்கச் செய்துவிடுகிறது. இலங்கையில் யுத்தம் முடிந்த போது முதன்முதலாக A9 வழியே பயணித்த போது காற்றெல்லாம் அழுகையின் குரல்களும் ஒப்பாரிகளும் என் செவிகளுக்குள் கேட்பது போலத் தோன்றியது.

Tuesday, August 13, 2013

Kai Po Che-தோழமையின் நிழல்.



சின்ன வயதில் கிரிகெட் விளையாட்டில் ஒரு பித்து நிலைதான் இருந்தது.வீட்டின் சிறிய முற்றம்>வீதி>வயல் வெளிகள் என விளையாடாத இடமே இல்லை.அப்போது பெட்டும் பந்தும் அபூர்வப் பொருள்களாகவே கண்களுக்குத் தெரிந்தன.சொல்லிச் சிரிப்பதற்கும் சந்தோசப்படுவதற்கும் ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

Wednesday, August 7, 2013

அன்பு அனைத்தையும் மிகைக்கும்…



                      
சிரியாவின் மனிதப்படுகொலைகளை இன்னும் நிறுத்தியபாடில்லை அசாதின் அரசாங்கம்.அன்றாடம் இறந்து மடியும் ஆயிரம் உயிர்களின் வலியையும் அந்த தேசத்தின் விடுதலையையும் பாடுகிறது மாஹிர் ஸெய்னின் இப்பாடல்.

Wednesday, July 31, 2013

எம்.எச்.எம் ஷம்ஸ் - கலையை ஆயுதமாக்கிய கலைஞன்


வீட்டில் அப்போது ஒரு கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிதான் இருந்தது.மாலை செய்திகளைத் தொடர்ந்து “வெள்ளிச் நிறகடிக்கும் வென் புறாவே“ பாடல் ஒளிபரப்பாகும்.அப்பாடலைக் கேட்க எல்லா விளையாட்டுக்களையும் விட்டுவிட்டு என் 12 ஆவது வயதில் தொலைக்காட்சிக்கு முன்னால் வந்து அமர்வேன். போரின் அவலங்களை துயரின் வலி சிந்தும் உணர்வுகளோடு பதியப்பட்ட பாடல் அது.மூன்று தசாப்தங்களின் மொத்த வலியையும் அப்பாடலினூடு நாம் இப்போதும் புரிந்து கொள்கிறோம்.

Wednesday, July 17, 2013

நட்புக்காக சில வார்த்தைகள்



                                                        

நண்பர் சாளை பஷீர் எனது புத்தகத்திற்கு எழுதிய அறிமுகக் குறிப்புகள் இவை.நன்றியுடன் பிரசுரம் செய்கிறேன்.
          
இலக்கிய வாதியான எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார் , “இறைவனை எப்போதும் கையில் பிரம்புடன் கூடிய தண்டனைக்காரனாகவே சம கால முஸ்லிம் சமூகம் சித்தரித்து வந்துள்ளது. மயிலிறகுடன் கூடிய கருணை நிறைந்த இறைவனை ஏன் அவர்கள் காட்ட மறுக்கின்றனர் ?”

Wednesday, July 10, 2013

நூல் அறிமுக நிகழ்வு



எனது  “ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை“ நூல் அறிமுக நிகழ்வு கடந்த 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை ஹன்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறைப் பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.